Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக் கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடி த்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள் ளது. விருதினை ரஜினியின் மரு மகன் தனுஷ் பெற்றுக் கொ ண்டார்.

ராவணன் படத்தில் நடித்த விக்ரமு க்கு சிறந்த நடிகர் விருதும், அங் காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்கு நர் வசந்த பாலனுக்கு சிறந்த இய க்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வா னது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யா வும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வா னார்.

பாடலாசிரியருக்கான விருதை வைர முத்துவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொ ழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவு க்கும் கிடை த்தது.

இதனை ரசிகர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது தனிச் சிறப்பு

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply