Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக் கடியான வே ளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெ டுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேர ங்களில் நமக்கு உதவிட பல ஆன் லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக் கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாத ங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல் வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.

இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகை யில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் (Windows Live Sky Drive) வசதியாகும்.

இந்த ட்ரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொரு வருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத் தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திட லாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அத னைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.

இதனைப்பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத் திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொட ங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின்படி சென்று பைல் களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத் திடும் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.

இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இல வசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: