Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – முட்டை பொடிமாஸ்

பூரிக்குத் தொட்டுக் கொ ள்ள கிழங்கைத்தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமா ஸைட்ரை பண்ணி பார்க் கலாமே…!

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
முட்டை – 4
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து, அதி ல் எண்ணெய் ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

* சூடான, சுவையான முட்டை கறி தயார்.

குறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply