Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர் களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன் ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர் களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனு மதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இது வரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

அண்மையில் கூடிய, இத்தகைய பெயர்களை அனுமதித்து, கண்காணித்து வரும் ஐகான் (ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும், புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம். இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி, குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெய ரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள் ளலாம்.

இப்போது நாடுகளை மட்டும் அடையாளம் காண பெயர் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு பின்பற்றப் பட்டு வருகிறது. இந்திய தளங்கள் .in என்ற துணைப் பெய ருடன் அமைக்கப்படுகிறது. இனி, புதிய அனுமதியின் பெய ரில், மாநிலங்களை அடையாளம் காட்டும் வகையிலும் பெயர் களை அமைத்துக் கொள்ளலாம். இந்த பெயர்கøளை அமைத்து ஒப்புதல் வாங்கிட, வரும் 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த தகவல் களை இந்திய இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமை ப்பின் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித் துள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: