Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ் புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ் புக்கி ற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’ என்ற சோ ஷியல் நெட் வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறு வன பொறி யியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலை ப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய் யும் விதமாக, சோஷி யல் ‌நெட்வொர்க் தளத்தை உருவா க்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது ‘கூகுள் பிளஸ்’ என்ற பெயரில் புதிய ‌ தொழில் நுட்பத்தி லான சோஷியல் நெட் வொர்க் தளத்தை அறி முகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய சோஷியல்  நெட் வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போ திலும், அதை விட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவை யினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ் டத்தை அடிப் படையாகக் கொண்டு இயங்கும் ‌ மொபைல் போன் கள் விற்கும் விற்பனை மை யங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், தற் போதைய அளவில், சோத னைக்காக இது அறிமுகப் படுத்தப் பட்டிருப்பினும், வரு ங்காலங்களில் பெரும் வர வேற்பை பெறும் என்று எதிர் பார்க் கப்படுகிறது. சர்க் கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங் அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக் கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கி ள்கள், பேஸ்புக்கின் ‘தகவல் பகி ர்ந்து கொள்ளும்( இன்பர் மேசன் ஷேரிங்)’ சேவையை ஒத்திருத் தாலும், இது பேஸ் புக்கைப் போல, தனது தகவலை அனை வருக்கும் தெரிவிக்காமல், உப‌ யோகிப்பாளருக்கு நெருக்க மான நண்பர்களுக்கு மட்டும் தெரிவி க்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல் நுட்ப முறையில் இங்கு போட் டோக்கள் அப் லோட் செய்யப்பட உள் ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத் தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப் பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ் புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவை யின் மூலமே சாத்தி யமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட் வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ் புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: