Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேற்றுக்கிரகவாசிகளை 2031 இல் சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக் க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.

இதனை எதிர்வு கூறியுள்ளவர் ‘ரஸ் யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற் கொள் ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரி னங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்ச த்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.

இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்த தாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத் தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பி ட்டுள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: