Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருக்கலைப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

கருக்கலைப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

உலக அளவில் ஆறுலட்சம் அபார்ஷன்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஆயிரம்

கர்ப்பிணிகளில் 13 பெண்களுக்கு அபார்ஷன் ஆகி டுகிறது. இந்த 13ல் 5 பெண்களுக்கு தானாகவே அபார்ஷன்ஆகிறது. ஆனால், மீதி 8பெண்கள் தாங்களாகவே முன்வந்து அபார்ஷன் செய்கிறார்கள். இப்படி அபார்ஷன் செய்யமுன்வரும் பெண்களில் அதிக மானோர் 25 வயதுக்குக் குறைவா னவர்கள் என்பதும் பலர் கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் என்ப தையும் யு.கே.விலுள்ள University of Aberdeen நடத்தியஆய்வு தெரிவிக்கின்றது.

இதுபோன்ற பல ஆய்வுகளில் திருமணமான பெண்களைவிட திரும ணமாகாத பெண்களே அதிகமாக அபார்ஷன் செய்ய முன்வருகிறா ர்கள் என்ற ஆய்வுத் தகவல்கள் அதிர்ச்சி யூட்டுகின்றன. அப்படி அடி க்கடி அபார்ஷன்கள் செய்வதால் இளம் பெண்களுக்கு ஏற்படும் பாதி ப்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

“இன்றைய வாழ்க்கை சூழலில் அபார்ஷன் என்று சொல் லக்கூடிய கரு க்கலைப்பு அதிகரித்துக் கொண்டேபோகிறது. ஒரு பெண்ணுக்கு தானாக வே கர்ப்பம் கலைந்து விடுவதை மருத்துவ சிகிச்சைகளின் மூலம் தீர்த்து விடலாம். ஆனால், தானாகவே முன் வந்து கருவை கலைக்கச் செய்வது கொலை செய்வதற்குச் சமம். மருத்துவ உலகில் பல விதமான தடுப்பு முறைகள் வந்துவிட்டாலும் கூட திருமணமான பெண்களைவிட திரும ணமாகாத இளம்பெண்கள் செய்யும் அபார்ஷ ன்கள் மிக மிக வேதனைக்குரியது; வெட்கக் கேடானதும் கூட”

பெண்களுக்குத் தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதற்கு என்ன காரணம்?

“சில காரணங்களைக் கூற லாம். குறிப்பாக, மரபணு பிரச்சினைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாடு, தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாயின்உடம்பில் நோய்த் தாக்குதல், தாயின் உடம்பில் திடீர் கிருமித் தாக்குதல் ஆகிய காரணங்களால் அபார்ஷன் ஆகிவிடுவதோடு அளவுக்கு அதிகமான ட்ராவல், அதிக எடை, பலம் குறைந்திருப்பது, அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் ஆகிய கார ணங்களால் கூட கர்ப்பம் தானாகவே கலையக் கூடிய வாய்ப்பு உள்ளது.”

இந்தப் பிரச்சினைக்கு என் ன செய்யவேண்டும்?

“மரபணு பிரச்சினைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாட்டை மரபணுச் சோ தனையின் மூலம் கண்டு பிடித்து அதற்கேற்ற சிகிச்சையுடன் குழந்தை ப் பேற்றை கவனமாக எதிர் நோக்க வேண்டும். அதனால்தான் இரத்த சொந்தத்தில் (அக்காவின் மகள், மாமனின் மகள், இரத்தம் சார்ந்த உற வினர்) திருமணம் செய்வ தைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அதே போல் கணவனுக்கு RH பாஸிட்டிவ் மனைவிக்கு RH நெகடிவ் என்ற ப்ளட் குரூப் இருந்தால் கருவில் இருக்கும் குழந் தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதை முன் கூட்டியே அறிந்து ஆன்டி-D போ ன்ற மருந்துகள், ஊசிகள் கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம். 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாகும்போதுகூட கரு கலை ந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் மிகக் குறைந்த வயதும் இல்லாமல் அதிக வயதும் ஆகாமல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது.

கர்ப்பப்பை பிரச்சினை என்று எடுத்துக்கொண்டால்… கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் சிறியதாக காணப்படுவது, கர்ப்பப்பை பிளவுபட்டு அல்லது நாக்கு மாதிரி சவ்வு வளர்ச்சி அடைந்து தொங்கிக் கொண்டிருப்பது, ஃபை ப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை தளர்ந்து காணப்படுவது, காதுபோன்று இருபக்கமும் இறக்கை விரித்தாற்போல் காணப்படுவது என எந்த மாதிரி குறைபாடு என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற் போல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நிலை பாதிப்புகள் என்பது பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை வி யா தி, கர்ப்பகால சர்க் கரை வியாதி, பி.பி, இரத்தசோகை, தைராய்டு மற்றும் சிறுநீரக வியாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய மான விஷயங்கள். கர்ப்பகாலத்தில் சரியான உணவுக்கட்டுப்பாடு, உட ற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை வியாதியையும், பி.பி .யையும் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவு மற்று ம் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு கொடிய பின்விளைவுகளைக் கொண்டு வரும் இரத்த சோகையை விரட்ட வேண்டும். சிறுநீரக வியாதிகளுக்கு மருத்துவரி டம் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.

“அக்யூட் இன்ஃபெக்ஷன்ஸ்” எனப்படும் திடீர் தொற்று வியாதிகளில் ஏற்படும் தாக் குதல். அதாவது… வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அம்மைத் தொற்று. இதற்கும் மருத்துவரின் உதவியு டன் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவை எல்லாவற்றையும் மீறி தானாகவே அபார்ஷன் ஆகி விடுவதை நினைத்து கவலைப்பட வே ண்டாம். கடவுளே நன்மை செய்வதற்காக அந்தக் கருவை கலைத்து விட்டார் என்று மன திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மேற்கண்ட பிரச்சினைகளா ல் பாதிக்கப்பட்ட தாயின் கருவை எடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது, அது ஏதோ ஒரு குறைபாடு கொண்ட கருவாக இருந்திருக்கிற து. ஒருவேளை அக்கரு குழந்தையாக பிறந்தாலும் ஏதோ ஒரு குறை பாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சில நல்ல குழந்தைகளும் ஆகிவிடுவதும் உண்டு. எனவே அபார்ஷன் ஆகாத அளவுக்கு முன்கூட்டியே பரிசோதனைகள் செய்து மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை ப்படி வாழ்வது உத்தமம்.”

சரி, தானாகவே முன்வந்து கருவை கலைத்துக் கொள்ளும் முறை பற்றி கூறுங்களேன்?

“நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கொருவர் என்ற நிலைகூட மாறி நாம் இருவரும் குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்கிற அளவுக்கு மாறிவிட்ட காலம். இதற்கு அதிநவீன வாழ்க்கை , பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வு எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போக லாம். இக்காரணமெல்லாம் திருமணமான தம்பதிகள் சம்பந்தப்பட்ட காரணங்கள். ஃபேஷன் உலகத்துக்குள் புகுந்து பண்பாட்டை சீரழிக்கும்வகையில் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறையற்ற வாழ்விலும் பல கொலைப் பிரசவங்கள் (அபார்ஷன்) அரங்கேறிக் கொண்டிருப்பது மற்றொரு கார ணம்.

அபார்ஷன் என்கிற அபாய கட்டத்திற்கு செல்லாமல் இருக்க தற்காப்பு முறைகள் என்னென்ன?

“ஆணாக இருந்தால் ஆணுறை அணிந்து கொண்டோ, பெண் பெண்ணுறை அணி ந்தோ செக்ஸில் ஈடுபடலாம். கணவன் மனைவியாக இருந்தால் முதல் குழந்தை பிறந்தவுடன் காப்பர்-டி அணிந்து தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். அதுவு ம், நார்மல் டெலிவரி என்றால் பத்து நாட்கள் கழித்தும், சிசேரியன் டெ லிவரி என்றால் 3 மாதம் கழித்தும் காப்பர்-டி அணிவது நல்லது. திரும்ப வும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் காப்பர்-டியை எடுத்து விட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். காப்பர்-டி அணிந்து கொள்ளாத பெண்க ள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

பீரியட்ஸ்க்கு (மாதவிடாய்) பிறகு முதல் ஏழுநாட்களும் கடை சி ஏழு நாட்களும் கரு உருவாகும் வாய்ப்புக் குறைவு. எனவேதான் கரு உருவாகும் வாய்ப்பு அதிகமு ள்ள அந்த இடைப்பட்ட (21 நாட்களில்) காலத்தில் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவே கிராம ப்புற பெண்களாக இருந்தால் பீரியட் ஸீக்குப் பிறகு 30 நாட்களுக்கும் மாத்தி ரைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கும் காரணம் உண்டு. கணக்கு வைத்து க்கொண்டு சரியான நாளில் சாப்பிடமாட்டார்கள் என்பதால் முதல் ஏழு மாத்தி ரைகளிலும் கடைசி ஏழு மாத்திரைகளிலும் கருத்தடை மருந்துள்ள மாத்திரைக்குப் பதிலாக சாதாரண சத்துமாத்திரைகள் இருக்கும்.

இந்தக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் “அவசரநிலை கரு த்தடை மாத்திரை (Emergency Contrace- ptive)ளை செக்ஸ் வைத்துக் கொண்ட 24 மணிநேரத்துக்குள் போட்டுக் கொண்டால் கரு உருவாவதைத் தடுத்துவிட லாம்.

இல்லையெனில், இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தப்படும் இன்ஜக் டபுள் கருத்தடை மருந்து வந்து விட்டது. அதை உடம்பினுள் செலுத்திக் கொண்டால் அதிலுள்ள கரு த்தடை மருந்துகள் இரத்தத்தில் கலந்து கருத்தரிப்பை தடுக்கும். அதுவே நிரந்தர மாக கருத்தரிப்பு ஏற்ப டாமல் இருக்க… ஆண்களுக்கு “வேஜக்டமி”. பெண்களுக்கு “ட்யூபக்டமி” என குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை செய்துகொள்வது சிறந்த வழி.

இதில் பெண்களைவிட ஆண்களுக்கு செய்யும் வேஜக்டமி ஆபரேஷன் மிக மிக சுலபமானது. ஆனாலும், இன்றைய காலகட்டத்தில் அந்த ஆபரேஷனை செய்துகொள்வதால் “ஆண்” என்ற அந்தஸ்தே போய்விடும் என்று ஆண்கள் அலறு கிறார்கள். அதற்கு திரைப்படங்களில் இதுபற்றி சித்திரிக்கப்படும் நகைச்சு வைக் காட்சிகளும் அடங்கும். ஆண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்வ தால் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. வழக்கம்போல் மனைவியோடு இல்லறவாழ்க்கையை இன்பமாக ஆக்கிக் கொள்ளலாம். இப்படி பல வழிகள் இரு ந்தும் இதையெல்லாம் முறையாக கடைப் பிடிக்காமல் அபார்ஷன் என்ற நிலைக்கு திருமணமான பெண்க ளைவிட திருமணமாகாத இளம் பெண்கள் அபார்ஷன் அபாயத்துக்குத் தள்ளப்படுவதுதான் வேதனையிலும் வேதனை.”

இப்படி அடிக்கடி அபார்ஷன் செய்வதால் பெண்கள் பாதிப் புகளை சந்திக்க வேண்டி வருமா?

“அடிக்கடி அபார்ஷன் செய்துகொள்ளும் பெண்கள் தொற்று நோய்க்கிருமிக ளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சிலநேரங்களில் அதிகப்படியான இரத்த ப்போக்கு ஏற்படும். சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்படுவதோடு வலியும் அதிகரிக்கும். சில நேரங்களில் ஃபெலோஃபியின் ட்யூப்களில் அடைப்பு ஏற்பட்டு வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். அதனால்தா ன் முதல் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோ சனை வழங்குகிறார்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு அபார்ஷன் என்கி ற நிலைக்குப் போக லாம்.

தற்காப்பு முறைகள் என்று சொல்லக்கூடிய கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், கருத்தடை சாதனங் களால் பாதிப்புகள் இல் லையா?

“நிச்சயமாக பாதிப்புகள் உண்டு. இன்றைய அதிநவீன மருத்துவ உலகத்தில், உரு வான கருவைக் கரைக்கும் மாத்திரைகள்கூட வந்துவிட்டன. இவையெல்லாம் பாதி ப்புகளிலிருந்து மீள்வதற்குத்தான். நல்லவற்றிற்காக பயன்படுத்தப்படும் இவை பள்ளிக் கல்லூரி மாண விகளும் திருமணமாகாத இளம்பெண்க ளும் தவறாக பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருவதுதான் அதி ர்ச்சிக்குரிய விஷயம். இயற்கைக்கு மாறாக செய்யக் கூடிய எந்த ஒரு விஷயமும் ஆபத்துதான். அதுவும் அளவுக்கு மீறினால் அதிகப்படியான ஆபத்துகள்.

கருத்தடை மாத்திரைகளில் அதிகமான ஹார்மோன்கள் இருப்பதால் அதை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படும். குறி ப்பாக உடல் பருமன் அதிகரிக்கும். உடலில் நீர் கோத்துக் கொள்ளும். அதிக படபடப்பு, மனநிலை பாதிப்புகள், இடைப்பட்ட உதிரப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு கேன்சர் வரும் அபாயமும் அதிகம் என்று மருத்துவர்க ள் எச்சரிக்கிறார் கள்.

காப்பர்-டி பயன்படுத்துவதால் அதிகப்படியான உதிரப்போக்கு, வலி, கிரு மித்தொற்றுகள் ஆகியவை ஏற்பட்டு அவதிப்பட வேண்டியிருக்கும். இன்ஜக்டபுள் ஊசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு எடை அதிகரித்து விடும். பயம், படபடப்பு, டென்ஷன், எப்போதும் பதட்டநிலையிலேயே காணப்படுவார்கள். அதுவும் திருமணமாகாத பெண்ணாக இருந்தால் இந்த பாதிப்புக ளோடு சேர்ந்து சமூக ரீதியாகவும் மன ரீதி யாகவும் பிரச்சினைகள் உண்டாகும்.”

அபார்ஷன் செய்வதிலும் பாதிப்பு, தற்காப்பு முறைகளிலும் ஆபத்து என்றால் வேறு என்ன தான் செய்வது?

“ஒன்றும் செய்யாமல் இருந் தாலே எந்த பாதிப்பும் இல்லை. அக் காலத்தில் இருந்தது போல திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கருத்தரிப்பு நல்லது. இது பண்பாடு மட்டுமல்ல; இளைய சமுதாயங்களின் உடல்நலத்தில் கொ ண்டுள்ள அக்கறை யும் கூட. சிற்றின்பம் முக்கியம்தான். அதை திருமணத்து க்குப் பிறகு முறையாக வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவின்மூலம் பேரி ன்பமாக்கிக் கொள்ளலாம். ஆணா திக்கத்தை எதிர்க்க வரம்பு மீறுவது நாக ரிகம் அல்ல. கற் போடு இருப்பது நல்லது. கருவை அழித்து கலாச்சாரத்தை அபார் ஷன் செய்யவேண்டாம். இதைத் தான் “பெண் சக்தி” இயக்கத்தின் மூலம் ஒவ்வொ ரு கல்லூரியிலும் சென்று ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்று கூறினா ர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: