Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் மன அழுத்தம்

மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய் ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் பாதிக்கின்றது என்று தெரிவிக்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

தாம்பத்யத்தின் போது கணவன் மனைவி இருவரும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும். களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் கணவன் இருக்கும் போது மனை வி உறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்தா லோ, மனைவிக்கு இஷ் டமில்லாத சமயத்தில் கணவன் உறவுக்கு அழை த்தாலோ அது சிறப்பான தல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

இனப்பெருக்கத்தை தடுக்கும்

மன உளைச்சலுக்கு காரணமான ஹார்மோன் அட்ரீனலின் சுரப்பியில் சுரக்கிறது. இது விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப் பெ ருக்க ஹார்மோனை தடை செய்கிறது. அது மட்டுமல் லாமல் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஹார்மோனையும் சுரக்கச் செய்வதாக கூறி அதிர்ச்சி யடைய வைக்கிறது அந்த ஆரா ய்ச்சி.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிக ள்தான் இதனை கண்டுபிடித்துள்ளனர். மன அழுத்தம் மூலம் சுரக்கும் இனப்பெருக்கத் தடை ஹார் மோன், பிட்யூட்டரி சுரப்பியில் தாக்க த்தை ஏற்படுத்தி ஆணிடம் சுரக்கும் டெஸ் ரோஸ்டிரான் மற்றும் பெண் ணின் ஓவரிகளில் சுரக்கும் ஈஸ் ரோஜன் அளவினையும் கட்டுப்படுத் துகிறது. இதன் விளைவாக,. விந்த ணுக்களின் எண்ணிக்கை குறை கிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப் படைகிறது. இனப் பெருக்க ஈடுபாடும் குறைந்து போகிறது. இதனால் கருத் தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாப வர்களுக்கு மன உளைச்சல் அதிக ரிக்கிறது.

மிருகங்களுக்கும் மனஉளைச்சல்

2000 மாவது ஆண்டில்தான் இந்த இனப்பெருக்கத்தடை ஹார்மோன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பறவைகளில் மட்டுமே காணப்பட்ட இந்த ஹார் மோன் தற்போது பாலுட் டிகளிடமும், மனிதர்களிடமு ம் சுரப்பது கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

அடைத்துவைத்து வளர்க்கப் படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற் றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெ ருக்கச் செயல்களில் ஈடு படுவது பயனற்றது என்று இந்த ஆய்வாள ர்களில் ஒருவர் கருத்து தெரிவிக் கிறார்.

இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஏனெ னில் ‘வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெ ருக்கச் செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள் தொகை யை அதிகரிக்கிறார்கள்’ என்பது மக்கள்தொகைப் பெருக்க த்தை ஆராயும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

மனதில் உற்சாகம் நீடிக்கும்

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இரு வரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் புணர்ச்சி கொள்ள வே ண்டும் என்ற நோக்கத்தில்தான்.

உறவு கொள்வதற்கு முன் மேற்கொ ள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது. தவிர, திருமண மாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங் களால் இரு பால ருக்குமே தாம்பத்ய உறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜ ம்தான். அதுபோன்ற நிலையில், குறிப் பிட்ட இடைவெளி யில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவில் ஈடுபடுவது மனதில் உற்சாகத்தை நீடிக்கச்செய்யும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: