Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் ஹார்மோன் லீலைகள் – (செய்தி & வீடியோ)

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத் தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல் லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!

பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல் லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோ ன்கள் பண்ற சேட்டைதான்!

சரி,  நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல் லாருமே எதாவதொரு வய சுல காதல்வயப்பட்டிருப் பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரி யும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படி ன்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?

 “ஆக்ஸிடோசின்” அப்படிங் கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொ ல்றாங்க மருத்துவர்கள்.  ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?

இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்ல யும் அதிகமா சுரக்குமா ம்! அதுமட்டு மில்லாம “உடலுறவுக்கு” அடிப் படையே இந்த ஆக்ஸி டோ சின்தானாம்!

காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர் வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொ ல்லுவாங்க இல்லியா?

ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோ முன்னா,  மனுஷனோட பொ துவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழ கான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!

மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான்  இந் த ஆக்ஸிடோசின் அப்படிங்கி றாங்க விஞ்ஞானிகள்! அத னால தான் இந்த ஹார்மோ னை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!

ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல் லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே ஆக்ஸி டோசின்தான் தீய உணர்வு களான “பொறாமை, வக்கி ரம்” போ ன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபு டிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர் கள்!

என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய் வாளர்களும் ஆச்சரியம்/ அதிர்ச்சியடைஞ் சாங்களாம்!  எப்படி யோசிச்சாலும் உண் மை அது தானாம்?! ஒன்னும் சொல்றதுக் கில்ல!!

இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே  அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வு களுக்கும் காரணமா இருக்கி றது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச் சையில இத பயன்படுத்தலாம் னு சொல்றாங்க விஞ்ஞானிக ள்!

சரி, “ஆக்ஸிடோசின்” பத்தி படிச்சது படிச்சோம், இன்னும் கொஞ்சம் வெவரமா தெரிஞ்சி க்கலாமில்ல….. வாங்க இந்த வீடியோவைப் பார்ப்போம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply