Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பயர்பாக்ஸ் பிரவுசருக்குள் எத்தனை பரிமாணங்கள்

புதிதாக கார் வாங்கியவர்கள் தங்கள் கார்களுக்கு ஏதேனும் கூடுதல் சாதனங்களை வாங் கிப் பொருத்திக் கொண்டே இருப்பார்கள். சந்தையில் விற் பதில் எதனை வாங்குவ து, எதனை விடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். பயன்பாட்டின் அடிப்படையி ல் வாங்காமல், அடுத்தவரி டம் உள்ளது, அழகாக இருக் கிறது, விலை மலிவு எனப் பல சாதனங்களை வாங்கிக் குவிப்பார்கள்.

இதே போல் தான் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ் டென் ஷன் புரோகிராம்கள். பயர்பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர் என்பதால், பலரும் அதன் இயக்க வடி வமைப்பு குறியீடு களைப் பெற்று, கூடுதல் பயன்பா ட்டிற்கென ஆயிர க்கணக்கில் எக் ஸ்டென்ஷன் பு ரோகிராம்களைத்தந்துள்ளனர். இவை அனைத்தும் இணை யத்தில் இலவச மாகவே கிடைப்பதால், பலரும் இவற்றை டவுண்லோட் செய்கின்றனர்; இன்ஸ்டால் செய்கின்றனர். ஆனால் முழுமையாகப் பய ன் படுத்துகிறார்களா, என் றால் இல்லை என்றே சொ ல்ல வேண்டும். இதற்குக் காரணம் கிடைக்கும் எக்ஸ் டென்ஷன் புரோகிராம்களி ல் நமக்கு அவசியமாய்த் தேவைப் படுபவை எவை என்று பலரும் அறிந்து கொ ள்ளாமல் இருப்பதுதான். இங் கு பயர் பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் கட்டாய மாக வைத் திருக்க வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோ கிராம்களைப் பற்றி விளக்கக் குறிப்புக ளைப் பார்க்கலாம். இவற் றைத் தேர்ந்தெடுக்கையில், செயலா ற்றத்தில் விரைவு, செயல்திறன் அதிகரித்து நேரத்தைக் குறைத்திடும் வசதி ஆகியவற்றை அடிப் படையாகக் கொள்ளப்பட் டது.

1.எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களி ல் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள் ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்க ளில் உள்ள இணையப் பக்கங் களில் எழுதி வை ப்பது? அப்படியே எழுதி வைத் தாலும், மீண்டும் அத னைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள் விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதி யைத் தான் Evernote என்னும் எக்ஸ் டன்ஷன் தருகி றது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந் த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்கு றிப்புகள் அங் கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வை யிட்டாலும் அவை கிடைக்கும். தள முகவரி https://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper

2. கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வச தி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ள லாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பய ன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பா ரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்க ளை உருவாக்கலாம். ஒருமுறை இத னை டவுண்லோட் செய்தவுடன், அதிக மான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட்கள் கிடைக்கின்றன. எடுத் துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டா ர்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க் காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q=Greasemonkey&cat=all&x=8&y =17

3.எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங் களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக் மார்க்குகளை, எப்படி அனை த்து கம் ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடி யும்? இந்த வகையில் உங்களுக்கு உத வுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டெ ன்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட்களையும் அனைத்திற்கு மாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்ட ன்ஷன் புரோகிராம் மேற் கொள்கிறது. வெவ்வேறு பிரவு சர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணை த்துத் தரும். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/xmarkssync/

4. ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள வர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட் டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்க ளா?              

அப்படியானால், அந்த தள ங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்க ளுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ் டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங் களை எல்லாம்  ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டு கிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q= Speed+Dial&cat=all&x=25&y=10

5. ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள்  விமா னம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீ ர்கள். அப்போது பார்க்கும் இணை யத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ் செய் யப்பட்டு பின்னர் படிக்கக் கிடை க்க வேண்டும் என்று எண்ணுகி றீர்களா? அங்கே உங்களுக்கு இந் த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ் டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இ ந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத் தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/ ?q=Read+It+Later&cat=all&x=20&y=14

 6. ஈஸி யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் (Easy You Tube Video Downloader): வேகமாக இயங்கும் இன்டர்நெட் இ ணைப்பு இல்லை என்றால், யு-ட்யூப் வீடியோ தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகாது. எனவே யு-ட்யூப் போன்ற வீடியோ தளங் கள் நம் எதிர்பார்ப்பு களுக்கேற்ப கிடைக்காது. இப் படிப்பட்ட நேரங்களில் நம க்கு உதவிக்கு வருவது இந்த ஈஸி யுட்யூப் வீடியோ டவுண் லோடர். யுட்யூப் தளத்திலி ருந்து ப்ளாஷ் படங்களை உடனடியாக டவுண்லோட் செய் து, பின்னர் இன் டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பார்க்க உதவி செய்கி றது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q =Easy+You+Tube+ Video+Downloader&cat= all&x=16&y=20

7. ஆசம் ஸ்கிரீன் ஷாட் (Awesome Screenshot): ஓர் இணைய தளம் முழுவதுமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? ஆசம் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ் டன்ஷனைப் பயன்ப டுத்தலாம். திரையில் தெரிவது மட்டுமின் றி, அப்போது காட்டப் படாத பக்கம் முழுவ தும் சேவ் செய்து இந்த எக்ஸ்டன்ஷன் தரும். இதனை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள லாம். அந்த தளங்களின் மீது குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Awesome+Screenshot&cat=all&x =2 3&y=10

8. அட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus): பயர்பாக்ஸ் எக்ஸ் டன்ஷன் புரோகிராம் களில் இது மிகவும் பிரபலமான ஒன் று. திடீரென எழுந்தும், ஊர்ந்து வந்தும், விரிந்து வந்தும் நம் இணைய பயணத்தில் எரிச்சல் ஊட்டும் விளம்பரங்களை  இந்த எக்ஸ்டன்ஷன் தடுக்கிறது. இதனை இறக்கிப் பதிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Ad+Blok +Plus&cat=al l&x=23&y=17  
மேலே சொல்லப்பட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மட்டு மின்றி, மேலும் சிலவும் நமக்கு பயன்தருவதாக இருக்கலா ம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலோர் விரும்பும் வசதிகளின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன. பயர் பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் தளத்தில் (https://addons.mozilla. org/enUS/firefox) இவற்றைப் பெறலாம். இந்த தளம் சென்று, அதில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், தேவையானதை டைப் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: