Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவு கொள்ள சிறந்த கிழமை – அரிய தகவல்கள்

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வாழ்க்கையில் எந்தெந்த விடயங் களை எந்தெந்த கிழமைகளில் செய் தால் சாதகமாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை “லண் டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்” மேற்கொண்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள விடயம் இதோ:

திங்கள் (மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது):

வார விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்கும் திங்கட் கிழ மை, ஏறக்குறைய உலகம் முழுவ துமே டென்ஷ னான தினமாகவே உள்ளது.அலுவலகம் செல்வோர் கள், பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு செல்வோர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப் பினருக்குமே திங்கட் கிழமை என் பது ஒரு படபடப்பு மிகுந்த நாள் தான்.

அப்படியெனில் அன்றைய தினம் பி.பி.( ரத்த அழுத்தம்) எகிறும் என் பதை சொல்லவேண்டியதே இல் லை. எனவே தான் திங்கட்கிழமையை தங்களுக்கு பிடித்த வகையில் மன அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் தின மாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது ஆய்வாளர்களின் அட்வைஸ்.

செவ்வாய்க்கிழமை (செய்ய வேண்டி யவற்றை பட்டியலி டலாம்) :

செவ்வாய்க்கிழமையன்று ஏறக் குறைய நாம் வழக்கமான வேலை “மூடு” க்கு திரும்பியிருப்போம்.எனவே அன்றைய தினம்,வீட்டு விடயம் ஆனாலும் சரி; அலுவலக விடயம் ஆனாலும் சரி, செய்து முடிக்க வே ண்டிய அல்லது செய்ய நினைக்கும் காரியங்களு க்கான திட்டமிடலை செய்து கொள் ளலாம்.

வாரத்தின் தொடக்கத்தில் இருப்ப தால் அன்றைய தினம் நமது மூளை யின் இடதுபக்க இயக்க செயல்பாடு ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும்,எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்று கூறுகி றது “தொழிலக மற்றும் நிறுவனங்களுக்கான மனோ தத்துவ” ஆராய்ச்சி ஒன்று!

புதன் (காதல் செய்ய சிறந்த தினம்):

காதலை சொல்ல, முதல் டேட்டிங் கிற்கு சம்மதம் பெற, காதலர்கள் சந்தி த்துக்கொள்ள புதன்கிழமை மகா உசித மான கிழமை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண் டவர்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுமார் 8,000 பேர்களில் 40 க்கும் அதி கமான விழுக்காட்டினர் காதல் செய்ய புதன் கிழ மைக்கே ஜே…! போட்டுள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போக லாம் என்பதை முடிவு செய்து கொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநா வசிய மனமுறிவு ஏற்படாது. ஒரு வேளை காத லன் அல்லது காதலி யார் மறுப்பு தெரிவித்துவிட்டா லும், உறவினர் அல்லது நண்பர் கள் வீட்டிற்கு செல்வத்யு குறித்தாவது திட்டமிட்டுக் கொள் ள முடியும்.

சம்பள உயர்வும் கேட்கலாம்: இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புர மோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதி காரியிடம் பேச புதன் கிழ மைதான் “பெஸ்ட் சாய் ஸ்” என்று அடித்துக்கூறுகி ன்றனர் ஆய்வாளர்கள். வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து கா ணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக் கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொ ள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.

வியாழக்கிழமை (செக்ஸ் வைக்கும் தினம்):

செக்ஸ் வைத்துக்கொள்ள சிறந்த தினம் வியாழக்கிழமையைப் போ ன்று வேறு எதுவும் இல்லை என்கி றார்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர்கள். வாரத்தின் நடுப்பகுதியை தாண்டிய தினம் என்பதால், அன்றைய தினம் பாலி யல் இச்சைக்கான செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் “கார்டிஸால் எனர்ஜி” அளவு உச்சத்தில் இருக்குமாம். எனவே அன்றைய தினம் அதிகா லையில் கலவியலில் ஈடுபடுவது ஆகச்சிறந் தது என்கி றார்கள். ஆண் களுக்கான (செக்ஸ் ஹா ர்மோன்) டெஸ்டோஸ் டெரோனும், பெண்களுக் கான ஆஸ்ட்ரோஜ்னும் மற்ற நாட்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் அதி காலை அலாரம் வைத்துக்கூட எழுந்து கொள்ளலாம் என்று கூறி நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க் கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

வெள்ளிக்கிழமை: (புகைப்பதை கைவிட சிறந்த நாள்)

வார இறுதி என்பதாலும், மறு தினம் வாரவிடுமுறை என்ப தாலும் டென்சன், மன அழுத் தம் போன்றவை இருக் காது. “வில் பவர்” எனப்படும் மன உறுதியும் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்தபட்சம் அன் றைய ஒரு தினத் திற்காவது புகைக்காமல் இருக்கலாம்.முடிந்தால் இனிமேல் புகைப்ப தில்லை என்று மனதிற்குள் எடுத்துக்கொண்ட சத்தியத்தை அன்றைய தினம் நடைமுறைப்படுத்த தொடங்கலாம் என்கி றார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதே சமயம வெள்ளிக்கிழமை நாம் வார விடுமுறை “மூடு”க்கு வந்து விடுவோம் என்பதால், சிந்திக்கும் திறன் குறைந்துவிட வாய்ப்புள்ளது. எனவே முக்கிய முடிவு களை அன்றைய தினம் எடுப்பதை தவிர்க்கலாம் என்றும் அவர்களது அட் வைஸ்!

சனிக்கிழமை:

குழந்தை பெற்றுக் கொள் ள சிறந்த தினம் உங் களது குழந்தை எதிலும் சிறந்தவராக விளங்கவேண்டும் அல்லது வெற்றி யாளராக திகழவேண்டும் என்றால் அந்த குழந்தை சனிக்கிழமையன் று பிறந்தால் நிச்சயம் நடக்கும் என்கிறது “Office for National Statistics” மேற்கொண்ட ஆய்வு. அவ்வளவு ஏன் சனிக்கிழமை யன்று பிற ந்தவர்கள் பிரதமராக ஆவதற்கு கூட வாய்ப்பு ள்ளதாம். ஏனெனில் உல கில் 21 பிரதமர்கள் சனி க்கிழமைகளில் பிறந்தவ ர்கள்தான் என்றும், இதி ல் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னர் 6 பிரதமர்கள் சனிக் கிழமைகளில் பிற ந்தவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.

ஞாயிறு:

வெளியில் சாப்பிட சிறந்த தினம் வீட்டில் மனைவி சமை யலை சாப்பிட்டு போரடித்துப் போனவர்கள் அல்லது குடும் பத்தினரோடு ஓட்டலில் சாப் பிட விரும்புபவர்கள் பாரம்பரி யமாக கடைபிடிக்கப்பட்டு வரு ம் இந்த பழக்கத்தை தொடர ஏற் ற தினம்தான் ஞாயிறு என்கிறது ஆராய்ச்சி.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: