Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி இயக்க, சில கொசுறு தகவல்கள்

ப்ளக் இன் கவனம்
இணையத்தில் உலா வருகை யிலும் கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் சாதனங்களை இணைக் கையிலும் நாம் அடிக்கடி கேட்கும் பெயர் ப்ளக் – இன் என்பதாகும். இது எதனைக் குறி க்கிறது? என்று அறியாமல் அதனை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன வென்று பார்ப்போமா?

ப்ளக் – இன் என்பது குறிப்பிட்ட சில வகை இணைய தகவல் வடிவத்தைக் காட்டுவதற் கென நம் பிரவுசர் தொகுப்புடன் இணைந்து பணி யாற்றும் புரோகிராம் ஆகும். எடுத்துக் காட்டாக சில இணைய தளங்கள் ஷாக் வேவ் என்னும் விளையாட்டு சாப் ட்வேர் தொகுப்பு களைப் பயன்படுத்தி விளையாட அனுமதிக்கும். இதற்கு ஷாக்வேர் ப்ளக் இன் புரோ கிராம்கள் தேவைப்படும். இத னை அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் பதித்து உங்களை விளையாட வைத்திடும். சரி எந்த ப்ளக் இன் புரோ கிராம்கள் தேவை ப்படும்? எவையெ ல்லாம் நம்மிடம் இருக்கின்றன எ ன்று நமக்கு எப் படித் தெரியும் எ ன்றெல்லாம் கவலைப் படாதீர் கள். அதனை நீங் கள் பார்க்கும் இணைய தளமே கவ னித்துக் கொள்ளும். தேவையான ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லை யெனில் அவற்றைப் பதியும். இருந்தால் தேடி எடு த்து இயக்கி வழி வகுக்கும். அதே போல் ப்ளக் இன் புரோகி ராம்களிலும் புதிய பதிப்புகள் கூடுதல் வசதிகளோடு உருவா க்கப் படுகின்றன. இணையதளங்களே அவற்றைக் கண்ட றிந்து புதுப்பித்துக் கொண்டு உங்களுக்கு உதவிடுகின்றன.

ஆனால் தற்போது இந்த வகையில் பெரும் ஆபத்து கம்ப் யூட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. நாம் பதிந்து வைத்த ப்ளக் இன் புரோகிராம் களுக்கு அப்டேட் உள் ளதாகத் திடீரென ஒரு பாப் அப் செய்தி கிடை க்கும். நாமும் அந்த புரோ கிராமின் நவீன வசதிகளைப் பெற உட னே யெஸ் அழுத்துவோம். இந்த போர்வையில் ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோ கிராம்களை நம் கம்ப்யூட்டரில் திருட்டுத்தனமாகப் பதிந்து, நம் பெர்சனல் தகவல் களைத் திருடுவ துடன், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினையும் முடக்குவார்கள். என வே ப்ளக் இன் விவகா ரத்தில் கவனமாக இரு க்க வேண்டும்.

நம் விருப்பபடி வேர் டை இயக்க

வேர்ட் செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதன் ஸ்பெல்லிங், ஆட் டோ கரெக்ட், தோற்றம் என ஒரு சில விஷயங்கள் சிலருக்கு, சில காரணங் களால் தேவை ப்படாமல் இருக்கலாம். எப்படி இந்த தொகுப்பை நம் வசப்படுத் துவது என சிந்திக்கிறீர் களா? உங்கள் விருப்பப் படி வேர்ட் தொகுப்பை வளைக்க அதனை செட் செய்திடலாம். பல வகையான செட்டிங்குகள் Tools மெ னுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோ வில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு வகையான செயல்பாட்டிற்கெ ன இருக்கும். நீங்கள் மா ற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பத னைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல் பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதி ரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத் தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப் படும். எடு த்து விட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என் னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோ ற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

ஷிப்ட் கீ:
சில செயல்பா டு களை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டா ல் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்து க் காட்டா கப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல் பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப் ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன்பாட் டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல்பாடுகள் மா றுதலாக இருக்கும். எடுத் துக் காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக் கோடி டும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட் டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

டூல் பார் விளக்கம்
அப்ளிகேஷன் புரோகிராம் களில் பல டூல் பார்கள் தரப்படு கின்றன. எந்த டூல் பார் என்ன வேலையை மேற்கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் இருக்கலாம்; அல் லது நினைவிற்கு வர மறுக்க லாம். இதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. மவு ஸைக் கொண்டு போய் அந்த டூல் பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும். எதற்காக அந்த டூல் பார் என் பதுவும் தெரிய வரும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: