Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!

உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்ப டும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோ ம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதா வது, உறக்கக் குறைபாடு ள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு வித குறைபாடு. இத் தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம் னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது இந்த ஆய்வு!

இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என் றும், இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உற வில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவு வைத்துக் கொண்ட நி னைவே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க து! உறக்கக் குறைபாடு ள்ள சுமார் 832 பேர் கல ந்து கொண்ட ஆய்வு சொ ல்லும் முடிவு பொது மக்க ளுக்கு (ஆரோக் கியமான வர்கள்) இல்லை என்ப தை நினைவில் கொள்க என்கிறார்  டொரோன்டோவின் சுகாதாரப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏ சங்! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)

இம்முடிவில் முன்வைக்க ப்படும் அதிகபட்ச (8%) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர் களுக்கே! ஆனால், பொது மக்க ளுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையி லேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்! இக் குறைபாடுள்ள நோயாளி கள் உறக்க குறைபாடுகளி ன் மற்ற தொந்தரவுகளிலி ருந்தும் தப்புவதில்லையா ம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை சொல் லலாம்!

செக்சோம்னியாவின் பின்னனி?!

இவ்வினோதமான குறை பாட்டுக்குக்கான அறிவிய ல் பூர்வமான காரணம் என்னவாக இருக்கும் என் று சோதித்ததில், 15.9% செக்சோம்னியா நோயா ளிகள் போதைப்பழக்கம் உ ள்ளவர்கள் என்று தெரிய வந்துள்ளது! மேலும், செக் சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்து விடுகி றார்கள் என்றும் தெரிய வந்து ள்ளது!

பொதுவாக குழப்பமான நிலை யிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்க ளுக்கு தூக்கத்தில் நடக்கும் போதும் இக்குறைபாடு ஏற்படு கிறது என்று கூறுகிறார் ஷே ரான்! பாராசோம்னியா வகை யினுள் அடங்கும் செக் சோம் னியா, தூங்கத்தொடங்கும்போ து, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரா னின் இந்த ஆய்வு!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply