கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர்.
கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை: உலர் உபயோகப் பொருட் கள் அனைத்தையும் நன்றாக சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் (65 டிகிரி செ) கலந்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின் மாவுக்கலவையை அச்சிலிட்டு பிழி ந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து வெயில் அல்லது மின் உலர்த்தி மூலம் 60 டிகிரி செ. வெப்பநிலையில் 3 முதல் 4 மணி நேரம் உலரவைக்கவும். உலரவைத்த நூடுல்ஸ், காற்றுப்புகாதவாறு சிப்பான்களில் அடைத்து வைக்க வேண் டும்.
நூடுல்ஸ் உணவு தயாரித்தல்: தேவையான பொருட்கள்: நூடுல்ஸ்-25 கி, பீன்ஸ்-25 கி, முட்டைக்கோஸ்-10 கி, பெரிய வெங்காயம்-10கி, குடைமிளகாய்-10கி, வெங்காயத் தாள்-5கி , கொத்தமல்லி இலை-5கி, சோயாக சாஸ்-3 கி, தக்காளி சாஸ்-3 மிலி, மிளகு-5 கி, உப்பு-5கி, எண் ணெய்-10மிலி.
செய்முறை: நூடுல்சை கொதிநீரில் 20 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து ஆற வைத்து அத்துடன் சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்க் கவும். வாணலியில் எண் ணெய் விட்டு, உளுந்து, வெங்கா யம் மற்றும் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, நூடுல்சுடன் கலந்து 3 நிமிடம் வேகவைத்து பரி மாறவும்.
(தொகுப்பு: து.மாலதி, ந.வரதராஜு, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 94433 49748.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
nice
nice