Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் தன்னலத்தை துறந்தவர்களாக இருந்தால் . . . – வீரத்துறவி

ஜூலை 04 விவேகானந்தர் பிறந்த நாள்

* உன் உடலில் ஏற்பட்டுள்ள ஒரு துளிமையைப் பற்றி கவலைப்ப டாதே! இறைவன் கருணைக் கட லில் நீ மூழ்கி எழுந்திரு. இது போ ன்ற ஆயிரம் துளிகள் இருந்தா லும் அவை இருந்த இடம் தெரி யாமல் போகும்.

* உங்களிடம் அன்பு இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றும் இல் லை, நீங்கள் தன்னலத்தை துறந்த வர்களாக இருந்தால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றும் இல்லை.

* தனி மனிதன் நிலை உயரப் பெற் றால் தேசமும் உயர்வடைந்தே தீரும் என்பது உலக நியதி யாகும்.

* கீழ்படிவதற்கு முதலில் கற்றுக்கொண்டால், கட்டளை இடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.

* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உள்ள வனாக நினைத்தால் வலிமை படை த்தவ னாகிறாய்.

* கவலைகளை நாளைக்கும் மன மகிழ் ச்சிகளை இன்றைக்கும் வைத்துக் கொ ள்வோம். அப்போதுதான் இந்த வாழ்க் கை சுமையாக இருக்காமல், சுவை யாக இருக்கும்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொ ன்றுமே நமக்கு தேவையில்லை, அன்பு தான் வாழ்க்கை.

* பிறர்க்கு நன்மை செய்யும் இடம் நரகத்தில் இருக்கிறது என் றால், நீ அங்கேயே செல்.

* ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிட்டு விடா தீர்கள். மேலும் தோல்வி மனப் பான்மைக்கும் உள்ளத் திற்குள் நுழையவே இடம் தரக்கூடாது.

* உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையை தி யாகம் செய்யக்கூடாது.

* மனித வடிவம் கொண்ட ஒவ்வோர் உயிரினையும் வழி படுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.

* பூமிதேவியைப் போன்று அனைத்தை யும் பொறுப்பவராக இருக்க வேண்டும், நீங்கள் பொறுமையுடன் இருந்தால், உல கமே உங்கள் காலடியில் அமரும்.

* எப்போதும் இனிமையோடும், புன் னகை யோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* அன்பு ஒரு முதலீடு. உலகில் எவ்வள வு போட்டாலும் மீண்டும் திரும்பப் பெ றலாம்.

* வாழ்வில் ஒருவன் விருப்பங்க ளுக்கும் கோபத்திற்கும் அடி மையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத் தின் இன்பத்தை அவனால் உணர முடி யாது.

* அடக்கப்படாத மனம் நம்மை கீழ் நோக்கியே இழுத்துச் செ ல்லும், அடக்கப்பட்ட மனமோ நமக்குப் பாதுகாப்பளிக்கும், விடுதலையை த் தரும்.

* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற் கையோடு தினமும் நடத்தும் போராட்டமே மனித முன்னேற்றத்தின் படிக் கற்களாகும்.

* அளவற்ற ஆற்றல், பெரும் ஊக் கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை இவை யே நமக்குத் தேவை யாகும்.

– சுவாமி விவேகானந்தர்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: