Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேபிகார்ன் (சிறுமக்காச்சோளம்) சாகுபடி

பேபிகார்ன் என்பது 4 முதல் 9 செ.மீ. நீளமுள்ள பிஞ்சு மக்காச்சோளக்கதிர் கருவுறாத நிலையில் உணவாகப் பயன் படுத்தப்படுகிறது. இவற்றை கதிர் உறை களை நீக்கியபின் பச்சை யாக உண்ண லாம். ஒரு செடியிலிருந்து 3 முதல் 5 பிஞ்சுகளை 50 முதல் 65 நாட் களுக்குள் அறுவடை செய்ய லாம். இந்தி யாவின் நட்சத்திர உணவகங்களில் பல உணவுகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

சாகுபடி நுட்பங்கள்: சிறுமக்காச்சோளம் சிறந்த ரகமாக தமிழ்நாடு வேளாண்மை பல் கலை க்கழகம் கோ.பி.சி.1 என்ற ரகத்தை 1998ம் ஆண்டு வெளி யிட்டுள்ளது. இது தமிழ கத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற் றது. சிறு மக்காச் சோளம் அனை த்து பருவத்திற்கும் இறவையில் பயிர் செய்யலாம். அதே போன்று மானாவாரியாக ஆடிப்பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்), புரட் டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோ பர்) சிறந்த பருவமாகும்.

ஏக்கருக்கு 10 கிலோ அல்லது எக்டருக்கு 25 கிலோ விதை யாக தேவைப்படுகிறது. 45 செ.மீ. இடைவெளியாக பார்க் கும் 25 செ.மீ. ஆக செடிக்கும் இடைவெளி தேவை. சிறு மக் காச் சோளத்திற்கு உரப் பரிந் துரையாக 150:60:40 கிலோ/ எக்டர் தழைசத்து (300 கிலோ யூரியா), மணிச்சத்து (375 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் சாம்பல் சத்து (66 கிலோ பொட்டாஷ்) ஆகும். அடியுரமாக தொழு உரம் 12.5 டன் / எக்டர் கடைசி உழவிற்கு முன் இட வும். பின் யூரியா 165 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 375 கிலோ மற்றும் 33 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் அடியுரமாக இடவும். மேலு ரமாக விதைத்த 25 நாட்கள் கழித்து 165 கிலோ யூரியா மற்றும் 33 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் மேலுரமாக இடவும்.

விதைத்த மூன்றாம் நாள் உயிர் நீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும். பின் நான்காம் நாள், 10 நாட்கள் இடைவெளியில் ஒரு நீர் பாய்ச்ச வேண்டும். இவ் வாறாக 7 முறை நீர் பாய்ச்சுத ல் பயிருக்கு அவசியமாகும்.

பயிர் பாதுகாப்பு: களை நிர்வா கம்: விதைத்த மூன்று நாட்க ளுக்கு பிறகு ஒரு கைக்களை யும், 15லிருந்து 25 நாட்களுக்குப் பிறகு அட்ரசின் 500 கிராம்/எக்டர் என்ற விகிதத்தில் கைத் தெளிப்பான் மூலம் தெளிக்கவும். பிறகு ஒரு கைக்களையாக 40-45 நா ட்கள் இடைவெளி விட்டு எடுக்கவும்.

பூச்சி நிர்வாகம்: விதைக் கும் போது பியூரிடான் 3ஜி குருணையை எக்ட ருக்கு 10 கிலோ வீதம் இடவேண்டும். நட்ட 15 நாட்களுக்குப் பிறகு எண் டோசல்பான் 3லிருந்து 4 மி.லி. ஒரு லிட்டருக்கு கலந்து தெளிப்பதன் மூலம் தண்டு துளைப்பான் மற்றும் வண்டு களைக் கட்டுப்படுத்துகிறது.

கதிர் எண்ணிக்கையை அதிகரிக்க: சிறு மக்காச் சோளம் நட்ட 40லிருந்து 45 நாட்களுக்குள் ஆண் பூக்களை நீக்குதல் சிறந்ததாகும். பெண் பூக்களின் குஞ்சம் வெளியே தெரிந்த வுடன் 2 நாட்களுக்கு இடைவெளியாக இளங்கதிர்கள் அறு வடை செய்ய வேண்டும். 6லிருந்து 7 ஆக இளங்கதிர்களின் அறுவடை எண்ணிக்கை ஆகும். இள ங்கதிர் வயதாக 50-65 நாட்கள் மற்றும் பச்சைத் தட்டாக 65- 75 நாட்கள் ஆகும்.

விதை உற்பத்தி: விதை உற்பத்தியைப் பெருக்குவதற்கு சிறு மக்காச்சோளத்தின் ஆண் பூக்களை நீக்கா மல் மற்ற மக்காச் சோ ளத்தைப் போன்று பயி ர் செய்வதன் மூலம் நாம் விதை உற்பத்தி யை அதிகப்படுத்தலா ம். அறுவடை வயது 100-105 நாட்களாகும்.

மகசூல்: ஒரு எக்டருக்கு இளங்கதிராக 6660 கிலோ, விதை யாக ஒரு எக்டேருக்கு 2000 கிலோவாகவும் அதுபோக பச்சை த்தட்டாக ஒரு எக்டேருக்கு 32.2 டன்னாக மகசூல் கிடைக்கின்றன. இவ்வாறு சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

வி.கு.பால்பாண்டி, இணை பேராசிரியர்,

ந.ராஜேஷ், முதுநிலை மாணவர்,

ரா.துரைசிங், பேராசிரியர்,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: