Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமர்நீதியார் குருபூஜை!

ஜூலை 6 அமர்நீதியார் குருபூஜை!

கும்பகோணம் அருகிலுள்ள பழையாறை கிராமத்தில் வசி த்தவர் அமர்நீதியார் என்ற வணிகர். தீவிர சிவபக்தரான இவர், பெரும் வள்ளலாகவும் திகழ்ந்தார். சிவனடியார்க ளுக்கு உணவு வழங்குவது டன், அவர்களுக்கு தேவையா ன கோவணம், துண்டு முத லானவையும் வழங்குவார்.

அமர்நீதியாரின் வள்ளல் தன் மை கண்டு மகிழ்ந்த சிவன், அவரது புகழ் உலகெங்கும் பரவும் வகையில் சோதனை செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், அடியார் வேடத்தில் அமர் நீதியாரின் இல்லத்திற்கு வந்தார் சிவன். அவரை வரவேற்று <உணவு உண்ண அழைத்தார் அமர்நீதியார். காவிரியில் நீராடிவிட்டு வருவதா க சொன்ன அடியார், தான் கொ ண்டு வந்த ஒரு கோவணத்தை அவ ரிடம் கொடுத்து, “ஐயா… இதை பத்திரமாக வைத்திரும். இதன் மதிப்புக்கு அளவே கிடையாது; பல அற்புதங்களை இது நிகழ்த்தும் சக்தியுடையது. எனவே, பாதுகாப் பான இடத்தில் வைத்திரும். இப் போது மழை வரும் போல் தெரிகி றது. கொண்டு சென்றால் நனைந்து விடும்…’ என்று கூறி, அவரிடம் ஒப்படைத்தார்.

அதை, பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டார் அமர்நீதியார். ஆற்றுக்குச் சென்ற சிவன், அந்த கோவணத் தை காணாமல் போகும்படி செய்து விட்டார். இதற்குள் மழை வந்து விட, நனைந்த படியே வந்தார். அவரு க்கு ஒரு புதிய துண்டு ஒன்றைக் கொடுத்து, துவட்டிக் கொள்ளச் சொ ன்னார் அமர்நீதியார்.

“அதெல்லாம் இருக்க ட்டும்… நான் கொடுத்த கோவணத்தை எடுத்து வாரும்; மாற்றிக் கொள் ள வேண்டும்…’ என்றார். அமர்நீதியார், பெட்டியைத் திறந்து பார்க்க, கோவணத்தைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், அடியாரிடம் வந்து விவரம் சொல்லி, வேறு கோவ ணம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்; அடியாருக்கு கோபம் வந்து விட் டது.

“மகிமை மிக்க கோவணம் என நான் சொன்னதால், அதை, நீர் மறைத்து வைத்து, புதிய கோவணம் தருவதாக நாடகமாடுகிறீர். அதன் மர்மத்தைப் புரிந்து, அதிக விலை க்கு விற்க திட்டம் போட்டிருக்கிறீர். இப்படி கொள்ளையடிக் கும் பணத்தில், தான – தர்மம் செய்பவர் போல் நாடகமாடுகிறீர்…’ என் று, திட்டித் தீர்த்தார்.

அமர்நீதியார் எவ்வள வோ கெஞ்சியும், பெரு ம் பணமும், பட்டாடை களும் தருவதாகச் சொ ல்லியும் கேட்டபாடில் லை. நீண்ட வாக்குவாத த்துக்குப் பிறகு, “சரி… சரி… உன் செல்வ மெல்லாம் எனக்கு வேண்டாம். துறவிக்கு எதற்கு பணம்? இதோ, என் கோவ ணங்களில் ஒன்றை இந்த தராசுத் தட்டில் வைக்கிறேன். அதன் எடை அளவுக்கு கோவணம் தந்தால் போ தும்…’ என்று கோவண த்தை தட்டில் வைத்தார்.

அமர்நீதியாரும், ஒரு கோவணத்தை வைத் தார்; எடை சரியாகவில் லை. இன்னும் சில கோ வணங்களை வைத்தார்; அசையவில்லை. தன்னிடமிருந்த கோவணங்கள் முழுமையும், பட்டாடை களையும் வைத்தார். முள் ஆடக்கூட இல்லை. தன் செல்வம் முழுவதையும் வைத்தார். அது அசை யா ததால், “அடியாரே… இது என்ன சோ தனை! இப்போது நானும், என் மனைவி, மகனும் மட்டுமே இருக்கிறோம். நாங்கள் வேண்டு மானால் அதில் ஏறி அமர்கி றோம்; ஏற்றுக் கொள்ளுங் கள்…’ என்று சொல்லி, “சிவாயநம’ என்ற, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே, “நாங்கள் தின மும் சொல்லும் இந்த மந்திரத்துக்கு சக்தி இருக்குமானால், தராசு சீராகட்டும்…’ என் றார்.

ஐந்தெழுத்து மந்திரம் அங்கு ஒலித்தது மே, தட்டு சீராகி விட்டது. அப்போது, அடியாராக வந்த சி வன், ரிஷப வாகனத்தில் பார்வதிதேவியுடன் அமர்ந்து தன் சுயரூபம் காட்டி, எல்லாம் தன் சோதனையே என்றும், அவ ரது வள்ளல் தன்மையை உலகுக்கு காட்ட நடத்திய நாடகம் என்றும் தெரிவித்தார்.

“நமசிவாய’ என்ற மந் திரத்தைச் சொன்னா ல், வாழும் காலத்தில் செல்வ வளத்துடன் வாழலாம்; “சிவாய நம’ என்று சொன்னா ல், சொர்க்கத்திலேயே இடம் கிடைக்கும்; பிற ப்பற்ற நிலையை அடையலாம். சிவன், அந்த தராசை புஷ்பக விமானமாக மாற்றி, அப்படியே கைலாயம் அழை த்துச் சென்றார். அவர்கள் பரமனின் திருவடியை நேர டியாகத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர்.

அமர்நீதியாரின் குருபூஜை, ஆனி பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நமசிவாய எனும் நாமத் தையும், சிவாயநம எனும் நாமத்தையும் உச்சரித்தபடியே நாக்கு இருக்கட்டும்.   –     – தி. செல்லப்பா

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply