Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிலம், நீர் – இரண்டில் முதலில் தோன்றியது எது?

பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமா கப் பேசிவந்த பேச்சுக்களுக் கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய இன்றை ய அறிவியலாளர்கள், பூமி க்கு அடியே ஆழத்தில் ஹீ லியம் தூண்களை மோத விட்டு உயிரினங்க ளின் தோற்றத்தையும், படி நி லை வளர்ச்சியையும் காண முற்பட்டு அதில் பெருமள வு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இரு ளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக் கோளமானது, பல மில் லியன் நெருப்புக்குமிழ்க ளை உமிழ்ந்து கொண்டி ருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல் லை மீறியபோது வெடி த்துச்சிதறியது.

நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்து கொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டு காலம் எறிந்த பின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற் றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலா னது. எரிமலையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக் கொண் டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையா கப் பொழிந்து பருவ இயந்திரம் செயல் பட ஆரம்பித்தது. நெருப் பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தி ன் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ள து. நீர் வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவு யிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆற றிவு வரை படி நிலை வளர்ச்சி பெற்றன.

நிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண் மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறு த்துமாறு பல நுட்ப மான செய்திகளைச் சங்கப்பாடல்களில் கா ணமுடிகிறது. “முது நீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந் தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி விய க்குமாறு உள்ளது.

நிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரை யுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில், 

தலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார் த்து மகிழ்ந்தன!

அவனுடன் இனிது பேசி யபோது செவிகள் அவ ன் குரலைக் கேட்டு மகி ழ்ந்தன!

தலைவனைச் சேர்ந்தவ ழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறு பட்டும் காட்டும் உட லின் பண்புகளே எண்ணி வியப்புறத் தக்கன! என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவு வதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்

புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்

இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்

புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்

கண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்

கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்

மணப்பின் மாண்நலம் எய்தி

தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே?

குறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)

காட்சிக் கலப்பினால் கண்களும்,

கேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயி னும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன. 

காண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள் கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட் டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றன வே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: