Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொஸில்லா தான் அறிவித்தபடியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை…

மொஸில்லா தான் அறிவித்தபடியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன் று வெளியிட்டது. பெர்சனல் கம்ப் யூட்டர்களில் பயன்ப டுத்த ஒரு தொகுப்பும், ஆண் ட்ராய்ட் மொபைல் போன் களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிர வுசர்கள் வெளியாகியுள் ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களி லேயே இது வெளியாகியு ள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லின க்ஸ் மற்றும் ஆ ண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்ட ங்களிலும் இயங்கும் வகையில் பயர் பாக்ஸ் 5 வெளியாகி யுள்ளது.

பயர்பாக்ஸ் பதிப்பு 3, 2008 ஆம் ஆண்டில் வெளியானது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன் தான் பயர்பாக்ஸ் 4ன் சோதனைத் தொகுப்பு வெளி யாகிப் பின்னர் முழுமையான தொகுப்பும் உடனடியாகக் கிடை த்தது. இப்போது பயர்பாக்ஸ் 5 வந்துள்ளது. இது ஏறத்தாழ, பயர் பாக்ஸ் பதிப்பு 4ல் உள்ள பாது காப்பு பிரச்னைகளுக்கான தீர்வுக ளுடன் அமைக்கப்பட்ட பிரவுச ராக உள்ளது. எனவே பயர் பாக்ஸ் பதிப்பு 4ல் குறை காண்பவர்கள், அதற்குத் தீர்வாக பேட்ச் அப் பைல் எதனையும் எதிர்பார்க்காமல், பதிப்பு 5னை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரரான இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டி யாகவே பயர் பாக்ஸ் வடிவமைப்பும் வெளி யிடுவதும் இருந்து வந்தன. இப்போது கூகு ள் நிறுவனத்தின் குரோ ம் பிரவுசருடன் மொ ஸில்லா போட்டியிட வேண்டியுள்ளது. என வே கூகுள் போலவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பிரவுசர் வெளியிடுவதை வழக்கமாக மொஸில்லா கொ ண்டுள்ளது.

இன்டர்நெட் உலகம் மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வருகிறது. அத ற்கு ஈடு கொடுக்க, புதிய மாற்றங்களுடன் பிரவுசர் களை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என, 5 ஆம் பதிப்பினை வெளியி டுகையில், மொஸில்லா தலை மை நிர்வாகி கேரி கொவாக்ஸ் குறிப்பிட்டார்.
இந்த தொகுப்பில் உள்ள புதிய அம்சங்கள்:

1.சி.எஸ்.எஸ். அனிமேஷன்களை எளிதாக இயக்கலாம். இதனால் இணைய ஆப்ஜெக்ட்களை திரையைச் சுற்றி அமைக்கலாம். இதனால் டைனமிக் என்ற முறை யில் இயங்கும் இணைய தளங் களை எளிதாகப் பார்க்கலாம்.
2. இணையத்தில் உலா வருகை யில், நம்மைப் பின்பற்றாமல் பிரவு சர் இயங்க வேண்டும். விளம்பரம் மற்றும் பிற சுயநல வேலைகளுக்கு நம்முடைய தனிப்பட்ட விருப்பங் களை, நாம் செல்லும் இணைய தளங்களை அறியும் வகையில் இயக்கங்கள் அமைந்திடும். இதனை இந்த பிரவுசர் தடுக்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான பிரவுசர் தொகுப்பிலும் இந்த தடுப்பு வசதி தரப்பட்டு ள்ளது.

3. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், இரு பரி மாணப் படங்களைத் தரும் கேன்வாஸ் (Can- vas) தொழில் நுட்பம் இந்த பிரவுசரில் தரப்ப ட்டுள்ளது.

4. ஆட் ஆன் பில்டர் (Addon Builder) என்ற ஒரு வசதி இதில் இணைக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சோதனை முயற் சியிலேயே உள்ள தாகக் கூறப் படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக் கான ஆட் ஆன் எக்ஸ் டன்ஷன் எழுதுவதனை இது எளிதாக்கும்.

5.பிரவுசர் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் நே ரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 இணைய தளங்களை ஒரே நேரத்தில் இதில் திறந்து வைத்து இயக்கினாலும், குறைந்த அளவிலான ராம் மெமரியையே இது பயன்படுத்துகிறது.

6. இதில் ஆயிரத்தி ற்கும் மேலான எண் ணிக்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்திற் கான மாற்றங்கள் ஏற்படுத்தப்ப ட்டு ள்ளன. இவற்றைத் தனியாக அடையாளம் கண்டு நாம் அறிய முடியாது. ஆனால் பெரிய அளவில், அனைத்து வகை செயல்பாடு களிலும் விரு ம்பத்தக்க மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வை சென்ற பதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய் திடும் வகையில் உருவா க்கப்பட்டவையே.

7. இது ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் திறன் மிக்கது என பிரவுசர் களுக்கான சோ தனைகளில் தெரிய வந்து ள்ளது. தேவையற்ற விளம் பரங் களை இதில் இணை ந்துள்ள ஆட் பிளாக்கர் என்னும் விளம்பரத் தடுப்பு புரோகிராம் தடுக்கிறது.

8. ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து இயக்கலாம். பாதுகாப்பி னை முன்னிட்டு, கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் களைத் தடுப் பதற்காக, ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை இந்த பிரவுசர் அனுமதிப்பதில்லை.
ஓப்பன் சோர்ஸ் பிரவுசர்களைத் தந்து வரும் மொஸில்லா, தன் பதிப்பு 4ஐ முற்றிலுமாக பெரிய அளவில் மாற்றி அமைத்திருந்தது. அந்த பிரவுசர் 20 கோடி க்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்ப ட்டது என மொஸில்லா அறிவித்திருந்தது. இனி தொடர்ந்து, குறுகிய கால த்தில் அடுத்தடுத்து பிரவுசர் கள் வந்தாலும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட இணை ய தளங்கள், புதியனவற்றி ல் இயங்கு வதற்குத் தடை இருக்காது. பயர்பாக்ஸ் 4 அடிக்கடி கிராஷ் ஆவதாகப் பலர் புகார் அளித்திருந்தனர். பதிப்பு 5 அதனைச் சரி செய் துள்ளது. அது மட்டுமின்றி, மொஸில்லா நிறுவனம், இனி பயர்பாக்ஸ் 4 பிரச்னை களுக்குத் தீர்வளிக்காது. தன் வாடிக்கையாளர்களு க்கு இதனைக்கூறி, பயர் பாக்ஸ் பதிப்பு 5னை இன் ஸ்டால் செய்து பயன்படுத் துமாறு மொஸில்லா கூறி யுள்ளது. இதுவரை பயன் படுத்தி வந்த ஆட் ஆன் எக்ஸ்டன்ஸன் புரோகி ராம் கள், பதிப்பு 5லும் இணைந்து செயல்படும்.
வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 6,7,8, 9, 10 ஆகியவையும் முக்கியமானவை யாகவே இருக்கும். இருப்பினும் இந்த பயர்பாக்ஸ் பதிப்பு 5 மட்டுமே, ஆரவாரத்துடன் வெளி வந்துள்ளது. அடுத்தடுத்து பிரவுசர்கள் வர இருப்பதால், இணையதள வடிவமைப் பாளர்களும் ஒரு எதிர்பார்ப்பில் இருப்பார் கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என மொஸில்லா தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் அடுத்த பதிப்பினை எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply