Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரிதான 10 நோய்கள்

எத்தனையோ நோய்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்படியும் சில மிகவும் அரிதான நோய்கள் இந்த உலகத்திலே இருக்கின்றன.

1. Reduplicative Paramnesia

இதனால் பாதிக்கப்பட்டவர்களு க்கு தாங்கள் இருக்கிற இடம் இர ட்டிப்பாகி விட்டதாக நினைப் பார்கள். அதாவது தங்கள் வீட் டில் இருந்து கொண்டே இது தனது வீடு அல்ல தன வீட்டைப் போன்ற இன்னுமொருவர் வீட்டில் இருப்பது போல நம்புவார்கள்.

2. Cotard Delusion

இந்த நோயினால் பாதிக்கப்ப ட்டவர்கள், தாங்கள் இற  ந்து விட்ட தாகவும் தங்கள் உடல் புதைக்கப்பட்டு அழுகிக் கொண் டிருப்பதா கவும் நினைப்பார்கள்.

3. Fregoli Delusion

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒருவர் போலவே நோக்குவார்கள். உரு வம் வேறு பட்டுத் தெரிந்தாலும் குறிப்பிட்ட ஒரு நபரே தன் முன்னாள் வெவ்வேறு உருவங்களில் தெரிவதாக நம்புவார்கள்.

4. Capgras Delusion

உண்மையில் தனக்குத் நெருக்கமான ஒருவ ரையே அது அவர் அல்ல வேறு ஒருவர் தனக்கு நெருக்கமான அந்த நபர் போல வேசமிட்டு வந்துள்ளதாக நினைப்பார்கள்.

5. Stendhal syndrom

இந்த நோயாளிகளுக்கு அழகான சித்திர ங்களைக் கண்டாலே போதும் இதயம் பட படக்கும், மனக்குழப்பம், தலைச்சுற்று என்ப வை ஏற்படும்.

6. Diogenes syndrom

இவர்கள் தங்களையே புறக்கணித்துக் கொள் ளுவார்கள். எப்படி வசதியான வீடு இருந்தாலும் பிச்சைக் காரர்கள் போல வீதியோ ரத்தில் படுத்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண் டவர்கள்.

7. Lima syndrom

ஒருவரைக் கடத்தி (  ) வைத்திருக்கும் நபர், தான் கடத்தி வைத்திருக்கும் நபர் மேலேயே அனுதாபப்பட்டு அவர்மேல் அன்பு கொள்வதைக் குறிக்கும்

8. Stockholm syndrom

தன்னைக் கடத்தி வைத்திருக்கும் அல்லது துன்புறுத்தும் நபர்மே லேயே அன்பு கொள்வதைக் குறிக்கும்.

7. Genitalia retraction syndrom

தங்கள் பாலியல் உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி சுருங்கிப்  போவதாக நினைக்கும் நிலை மை

10. Exploding head syndrome

தங்கள் தலை ஒரு வெடி குண்டு போல வெடித்துச் சிதறுவதாக நினைப்பார்கள். ஆனால் எந்த நோவும் இருப்பதாக உணர மாட் டார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply