Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்சங் கேட் 222 இந்தியாவில் . . .

தொடக்க நிலை மொபைலாகத் தான் வடிவமைத் துள்ள சேட் 222 போனை, விரைவில் இந்தியாவில் சாம்சங் விற்பனைக்குக் கொண் டு வரவுள்ளது. ஏற்கன வே அறிமுகமான சேட் வகை மொபைல் போன் களைப் போலவே, இதி லும் சோஷியல் நெட் வொர்க்கிங் தளங்களுக் கான இணைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைக ளுக்கு சப் போர்ட் வழங் கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டு ள்ளது. இரண் டு சிம்களுக்கும் அழைப்பு வந்தால், தற்காலிகமாக நிறுத்திப் பேசும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சாம்சங் சேட் 322 மற்றும் 335 ஆகியவை ஒரு சிம் இயக்க போன்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

சாம்சங் சேட் 222 மொபைலில் 2.2 அங்குல திரை, வீடியோ பதிய க்கூடிய விஜிஏ கேமரா, முழுமை யான குவெர்ட்டி கீ போர்டு ஆகியன தரப்பட்டுள்ளன. போன் பிளாக் பெரி போன்களைப் போலத் தோ ற்றம் கொண்டுள்ளது. எப்.எம். ரேடி யோ, DNSe ஒலி இயக்கம் கொண்ட ஸ்டீரியோ மியூசிக் பிளேயர், இன் டர்நெட் எச்.டி.எம். எல். பிரவுசர், 45 எம்.பி. நினை வகம், தொடர்ந்து 11.5 மணி நேரம் மின் சக்தி வழங் கக் கூடிய 1000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும்.

இதன் அதிக பட்ச விலை ரூ.3,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply