Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெ ளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன் னேறிக் கொ ண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கி றதோ… இல்லீயோ…? அம்ம ணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளி யாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோ ட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ் ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடி னாராம் ஸ்ரேயா. விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் கீழே விழப்போன ஸ்ரேயாவை அவரது தோழிகள்தான் கைத் தாங்கலாக அழை த்துச் சென்று காரில் உட்கார வைத்ததாக செய் திகள் வெளி யாயின.

இந்த செய்தியைப் படித்ததும் கொதி த்துப் போன ஸ்ரேயா, “நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட் டம் போட்டதாகவும் செய்தி பரவி இருப்பது வேதனைய ளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஹோட்டல் பப்களுக்கு அபூர்வ மாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போக வில்லை. மதுவும் அருந்தவுமி ல்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர் நெட்டில் நான் குடித்து விட்டு ஆடு வது போன்று படம் வெளியி டப்பட்டு உள்ளது. அந்த படத்தில் இரு ப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அந்த போட்டோவை வெளியி ட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப் பேன், என்று கூறியுள்ளார்.

போற போக்கைப் பார்த்தால் சர்ச்சைகளில் சிக்குவதில் த்ரிஷாவை முந்தி விடுவார் போலிருக்கிறதே?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply