Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார்.

‘இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?’ எனும் கேள்வியோடு தொடர்கிறார்… 

மனைவியின் சினைப் பையிலிருந் து கருமுட்டை வெளிப்பட்டு கருக் குழாய் வழியாக வரும் — கணவன் – மனைவி உடல் சேர்க்கையால் கண வரிடமிருந்து உயிரணு வெளிப்படும் — இரண்டும் கரு க்குழாயில் கலந்து சினைமுட்டையாகி கருப்பைக்கு வ ந்து பதிய மாகும். இதுதான் இயல் பான கருத்தரிப்பு. சோதனைக் குழாய் முறையில் உயிரணுவையும் கரு முட்டையையும் உடலிலிருந்து வெ ளியே எடுத்து, சேகரித்து ஆய்வக த்தில் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக் குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக்கச் செய்வார்கள். கரு முட்டை யையும் உயிரணுவையும் ஒன்றாக்கி, கருப்பைக்குழாய், பெண்ணி ன் உடலுக்குள் செல்லும் செயலாக்க முறையை, வெளியே ஆய்வ கத்தில் செய்வது சோதனைக் குழா ய் முறையாகும். இது படிப்ப டியாக ஐந்து கட்டங்களாக நிறை வேற்றப் படுகிறது. 

கருமுட்டையைத் தூண்டி முதிரச் செய்து விடுவித்தல். முதிர்ந்து வெ ளியாகும் கருமுட்டையைச் சேக ரித்தல் உயிரணுக்களைச் சேகரித் து அதில் தரமானவைகளை மட்டும் தனியே பிரித்து எடுத்தல் ஆய்வகத்தில் உயிரணுவையும் முட்டை யையும் ஒன்றாகச் சேர்த்து – கருவாக்கம் செய்து – கரு உயி ரை வளர்த்தல்கரு உயிரை கருப்பை க்குள் செலுத்துதல்

இச்செயல் முறையை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கமாகப் பார் ப்போம் 

முதலில் பெண்ணின் சினைப் பை, ஹார் மோன் போன்றவை பரிசோதனை செய்யப் படுகிறது. அதன் பிறகு பிரத்தியேகமான ஹார் மோன் ஊசியைப் போட்டு முட்டையை முதிர்ந்து வரச் செ ய்ய வேண்டும். முட்டை முதிர்ந்து வரும் நேரத்தை கவனமாக கண் காணிக்க வேண்டும். சரியான நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்ட்ரா சவுண்ட் காட்டும் வழியில் சிறிய ஊசியைச் செலுத்தி, கருமுட்டையை வெளியே எடுத்து சேகரிக்க வேண்டும். 12 முதல் 15 முட்டைகளைச் சேகரித்து, கணவ ரின் உயிரணுவோடு கலக்கச் செய் வார்கள். ஏதாவது ஒரு உயிரணு கரு முட்டையை துளைத்து, கரு வாக் கத்திற்கு அடித்தளம் அமை த்து சினை முட்டை யாக மாற்றும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவ்வா று நிகழாவிட்டால், முட்டையின் மேல் துளையிட்டு பலகீன மாக்கி, தரமான ஒரு உயிரணுவைப் பிடித் து, முட்டையின் பலகீனப் பகுதி யோடு உள்ளே புகுந்திடச் செய்வா ர்கள்.

பின்பு அவற்றை செயற்கை கரு ப்பைப் போன்ற இங்குப்பேட் டரில் (Incubator) வைத்து கருத்தரிக்கிறதா? செல்கள் பிரிகிறதா? சரியா வளர்கிறதா? என்று கண்காணிப்பார்கள். பல செல் நிலைக்கு வந்து, கரு உயிர் ஆனா பிறகு கருப்பைக்குள் செலுத்துவார்கள். இத ற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும். பின்பு கரு உயிர் இங்கு பதியமாகும். அதை அல்ட்ரா சவுண்ட், ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்து, பெண் கருத்தரித்து விட்டதை அறிவிப்பார்கள்.

(சோதனைக் குழாய் கருவாக்கம் நடந்துக் கொண்டிருக்கும் நிலை யில் ஒரு சில நாளில் அதைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்த தயாராக இருக்கும் போது அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக் கோளாறோ, அத்தியா வசியப் பயணச் சூழலோ ஏற்பட்டால் அதற் கும் மாற்று வழி இருக்கிறது. கருவாக்கம் செய்யப்பட்ட சினை முட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு திரவ நைட்ர ஜெனில் மைனஸ் 196 டிகிரி வெப்பத்தில் உறையவைத்து விட வேண்டும். பின்பு அதை எப்போது வே ண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு ‘கிரையோ பிரசர்வே ஷன்’ (Cryo Preservatin) என்று பெயர்).

பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப் படும் கரு உயிரில் ஒன்று பதியமாகா மல் போனாலும், இன்னொன்று பதியமா க வேண்டு மென்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவை கருப்பைக்குள் செலுத் தப்படும். சில தருணங்களில் இரண்டு மே பதியமாகி, இரண்டு குழந்தைகள் வளரத் தொடங்கிவிடும். 

இதுதான் சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் செயலாக்க வழிமுறையாகும் என்று விளக்கி முடித்தார் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • s.suresh

    Dear Madam
    I have 10month baby. baby born through secarian only. i want to postbond min3years for my 2nd child. what way we have to do during sex.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: