Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைகீழ் அதிசய வானவில் – வீடியோ

வான் பகுதியில் மனதை மயக்கும் வானவில் ஏற்படுவது உண்டு. இந்த வானவில் வழக்கமாக வளைந்து காணப்படும். இதில் காணப் படும் பல வண்ண நிறங்கள் நீல வானத்திற்கு அழகு சேர்க்கும்.

ஆனால் பிரிட்டன் வெலஸ் ஷயர் வான்பகுதியில் ஏற்பட்ட வான வில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வானவில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

மேகக் கூட்டப்பகுதியில் காணப்படும் சிறு பனிவடிவங்களின் தாக் கத்தால் இந்த தலைகீழ் அதிசய வானவில் ஏற்பட்டு உள்ளது.

மேகத்தில் இருந்து மழைத்துளிகள் பூமியை நோக்கி வரும் போது வழக்கமாக வானவில் ஏற்படும். ஆனால் மழை ஏதும் இல்லாமல் சூரியன் “பளிச்” என சிரித்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த விசேடமான தலைகீழ் வானவில் தோன்றி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த தலைகீழ் வானவில் சில நிமிடங்களில் மறைந்து விட்டது. இதனை பார்த்தவர்கள் தங்கள் கைத்தொலைபேசி கமெராக்களில் படம் பிடித்தனர்.

மேகத்தில் பனி துகள்கள் வலது பகுதியில் அணிவகுத்து இருந்த தால் இதுபோன்ற வானவில் தோன்றி உள்ளது என ஆய்வு மைய நிபுணர்கன் தெரிவித்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply