Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்கள் ஏற்படுவது எப்படி?

நமக்கு ஏற்படுகின்ற தோற்று நோய்கள் பல்வேறு கிருமிகளின் தொற்றுக்களால் ஏற்படலாம். இந்தக் கிருமிகள் பொதுவாக நா ன்கு முக்கிய கூட்டங்களாக பிரிக் கப்படலாம்.

  1. பக்டீரியாக்கள்(Bacteria)
  2. வைரசுகள்(virus)
  3. பங்கசுக்கள்(Fungas)
  4. ஓட்டுணிகள்(parasite)

இவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறியவை. இவை பல்வேறு முறைகள் மூலம் எம்மைத் தொற்றிக் கொள்ளலாம்.

இவை தொற்றிக் கொள்ளக் கூடிய முறைகள்..

1.சுவாசம் மூலம்
2.உணவு , நீர் மூலம்
3.உடலுறவின் மூலம்
4.இரத்தத் தொடர்புகள் மூலம்( இரத்தம் ஏற்றுதல் , ஒருவருக்கு பாவித்த ஊசி யை இன் னொருவருக்கு பாவித்தல் )
5.நுளம்பு / கொசு போன்றவை மூலம்
6.செல்லப் பிராணிகள் மூலம்

பாக்டீரியாக்களை எடுத்துக் கொண்டால் இவை சுயாதீனமாக இயங் கக் கூடியவை . அதாவது மனித னின் கலங்களின் (cell)உதவி இல் லாமலேயே இவை சுயா தீனமாக உயிர் வாழும் ஆற்றல் பெற்றவை . இவற்றிற்கு தனியே சுவாச தொழிற்பாட்டு முறை , வளர்ச்சி முறை போன்றவை இருக்கும் காரணத்தால் , மனி தனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்ப டுத்தாமல் தனியே பாக்டீரியாக் களின் தொழிற்பாட்டை மற்றும் நிறுத்தக் கூடிய மருந்துகளை உட்கொ ல்லுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்களை நாம் அழித்து விடலாம். இவ்வாறான மருந்து களே அண்டி பயட்டிக்ஸ் (Antibiotics) எனப்படுகின்றன.

பக்டீரியாவால் ஏற்படும் சில நோய்கள்.

தைபோயிட் (typhoid), நியு மோனியா (pnumonia) , சிபிலிசு (syphilis), சய ரோகம்(TB), காயங்களில் ஏற் படும் தொற்றுக்கள் (wound infection)

ஆனால் வைரசுக்கள் அப்படி யல்ல, இவை மனிதனின் உட லின் உள்ளே சென்ற பிறகு தான் நமது கலங்களின் உதவியோடு தனது தொழிற்பாட்டை ஆரம்பித்து நமக்கு நோய்களை ஏற்படுத்தும். வைரசுக்களுக்காக தனியே சுவாச மற்றும் வளர்ச்சித் தொழிற் பாடுகள் இல்லாதபடி யால் அவற்றை அழிப்பதற்குரிய சிறந்த வீரி யமான மருந்துகளை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. இது தான் எயிட்ஸ் எனப்படும் ஒரு வைர சினால் ஏற்படும் நோய்க்கு சரியான மருந்தினைக் கண்டு பிடிக்க முடி யாமல் இருப்பதற்கான காரண மா கும்.

வைரசினால் ஏற்படும் சில நோய்கள்.

எயிட்ஸ், பறவைக் காய்ச்சல், தடிமன் , கூகைக்கட்டு, சின்னம்மை , ருபெல்லா

 ஓட்டுணிகள் எனப்படுப வை மனிதனின் கலங்க ளுக்கு உள்ளே செல்லா மல் வெளியில் இருந்த படியே பாதிப்பை ஏற்ப டுத் துபவை. உதாரண மாக ஸ்கேபிஸ்(scabies) , மற்றும் குடலிலே வள ரும் புழுக்கள்(worm) போன்றவை.

பங்கசுக்கள பொதுவாக உடலின் வெளிப்புறத்திலேதான் நோய் களை ஏற்படுத்தும். உதாரணமாக தேமல் எனப்படுவது ஒரு பங்கசி னால் ஏற்படும் நோயாகும்.ஆனாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறை ந்த ஒருவருக்கு இவை  கலங்களின் உள்ளே சென்று பாரிய நோய் களைஏற்படுத்தலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: