Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் என்பவள் ஒரு புத்தகம்தான்!!!

நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர் ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விம ர்சனங்களும் கூட எழுந்துள்ளன.

ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம் தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடி வு.

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுக ளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கி றாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர் களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த் தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியா தாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளி க்காட்டும் திறமை கிடையா தாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொ ண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணை யதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண் டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல் வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணைய தளத் தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங் களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந் தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத் தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார் த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப் பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திரு ந்தனர்.

73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசா லிகள் என்று தெரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறியிருந்தனர்.

பெண்களை நம்பலாம் என கூறியிரு ந்தவர்கள் 54 சதவீதம் பேர்.

ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இ ணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில் லையாம்.

ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மேட்டிவ் ஆன வை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடி கிறது என்று முடிக்கிறது அந்த ஆய் வு.

எல்லாம் சரி, நாளைக்கு காலையில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது ‘லைட்’டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடி ப்பாரா என்பதை கணி்க்க முடியுமான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணு வோம்..

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply