Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தமிடுவதால் தொற்று (AIDS- HIV) வருமா? வராதா?

ஓர் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை

HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுர க்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.

•அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண் டும். வெட்டுக் காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங் கள் போன் றவை சில உதாரணங்களாகும்.

• வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரை வாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வே ண்டும்.

மனித உடலுக்கு வெளியே HIV கிருமி யால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.

H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்ற வற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத் திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேக மாகத் தொற்றும்.

ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வா ழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையா ல் நோயைத் தேட முன் னிற்கிறான்.

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைக ளாவன.

1.    நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்

2. நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர் களிடையே பரவுவதற்குக் காரணமா கிறது.

3.    தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத் திலும் பின் பாலூட்டு வதாலும்.

4. இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா இரத் தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின் னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.

ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.

இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக்

ere's a picture of Ashley Judd and Coco Lee kissing an AIDS patient

குறைவாகும். இதனால் தான் பலரும் என்னிடம் சந் தேகம் எழுப்பி னார்கள்.

எச்சிலால் தொற்றாது என் பதை விவாதத்திற்காக ஏற் றுக் கொள் வோம்.

ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நட க்கும்?

எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமா கக் கூற முடியாது.

பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந் தாலும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சில ருக்கு 3 மாதங்களுக்கு மேலும் செல்வ துண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு தெரியாது பதற்றத்திலும் பயத்தி லும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடுவதுண்டு.

இருந்தபோதும், பலரும் பயப்படுவது போ ல  தொட்டுப் பேசுவதாலோ, அருகில் இருப்பதாலோ, உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள வதாலோ HIV தொற்றுவதில்லை.

காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில் லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள் விக்கு வருவோம்.

“உலகில் ஒரே ஒரு தட வைதான் இவ்வாறு தொற் றியதற்கான ஆதாரம் இரு க்கிறது. எனவே நம்பத்தகு ந்தது அல்ல என்றோ அல் லது அது போதிய ஆதாரம் அல்ல” என்று நீங்கள் கருதினால் உங்கள் தேர் வை நீங்களே தீர்மானி த்துக் கொள்ளலாம்.

சந்தோசமாக, ஆசைப்பட் டவருக்கு, விரும்பிய வருக்கு எல்லாம் வாயால் ஆழ்  முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

மேற்கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவ ற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை உறு தியாகச் சொல்ல முடியாது.

இல்லையேல் ஒரு சில வருட ங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண் டியிருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: