Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹார்ட் டிஸ்க் ஜாதகம்

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றா க்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உரு வாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க் கின் இடத்தைப் பயன்படுத்தி விட் டேன் என ஆச்சரியப் படலாம். உட னே ட்ரைவின் ஒவ்வொரு பகுதி யாகச் சென்று,எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்க ளின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடை க்கிறது.

இந்த புரோகிராமினைக் கம்ப்யூட் டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய் தவுடன் முதல் முறையாக இயக்கப் படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட் டுகிறது. ஒவ்வொன்றாகவோ அல் லது மொத்தமாகவோ தேர்ந்தெடு த்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித் தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திட லாம். ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண் ணங்களைக் கொண்டு வேறு படுத்திக் காட்டப்படும். இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம். இதனைப்பெற http://download.cnet.com /WinDirStat/30002248_410614593.html?tag=drop DownForm; productListing என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply