Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்லைன் மூவி எடிட்டிங் (Online Movie Editing Software)

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடு கிறீர்களா? ஆன்லைனி ல் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொ ள்ள உதவுகிறது pixorial.com என் னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அ டோப் போட்டோ ஷாப் அல் லது அண்மைக் காலத் திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவு கிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.

நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல் களை அனுப்பி மெரு கூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்க ளையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.

உங்கள் வீடியோ பை லை இந்த தளத்தில் அப் லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்ட ரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்ட லாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோ ன்றி மறைவது போன்ற எபக்டு களைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூ வியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடி வமைத்து டவுண்லோட் செய்தி டலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோ ஷியல் நெட்வொர்க் தளங்க ளிலுல் பதியலாம். அல்லது டிவி டியில் காப்பி செய்திடலாம்.

முதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ் வேர்ட் கொடுத்து அக்க வுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட் டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ஷாவினை நீங்களே உருவா க்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரிய மான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply