Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேளாண் நுட்பங்கள்: குறுகியகால நெல் சாகுபடி

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப் படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரக ங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடு துறை 47, கோ.47 மற் றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகிய வை ஏற்றவை.

ஒற்றை நாற்றாக ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 7 முதல் 8 கிலோ விதையளவு போதுமானது. ஒற்றை நாற்றுகள் சரிவராத தருணத் தில் இரண்டு நாற்றுக்களாக நடவுசெய்ய 12 முதல் 15 கிலோ வரை தேவைப்படுகி றது.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோ மோனாஸ் புளூரசன்ஸ் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் விதைக்கலாம். இவ்வாறு ஊறவைத்த விதை யை நனைந்த கோணிச்சாக்கில் கட்டி மூடி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டி பின்னர் விதைக்க வேண்டும். 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்று க்கள் நடவு செய்ய ஏற்றவை.

நடவு வயல் நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு மிகவும் சீரான முறை யில் சமன் செய்யப்பட வேண்டும். வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடை வெளியும் பயிருக்கு பயிர் 25 செ.மீ. என்ற அளவில் நாற் றுக்கள் நடவு செய்யப்பட வேண்டும். இளம் நாற்றுக்களின் பயிர் பிடிப்புத்திறன், தூர்கட்டி வளரும் திறன் அதி கமாக உள்ளதால் அதிக தூர்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும். நாற்றுக்கள் பாத்திகளிலிருந் து பிரிந்த 30 நிமிடங்களுக் குள் நடவு செய்ய வேண்டும்.

நெற்பயிருக்கு சாதாரணமாக காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் ப்பாசனம் செய்யலாம். அதா வது மண் மறைய நீர்கட்டுதல் நடவு செய்த முதல் 10 நாட்க ளில் மிக முக்கியம். பின்னர் சுமார் 1 முதல் 2 செ.மீ. அளவிற்கு நீர்ப்பாசனம் செய்து வயலில் மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்தமுறை நீர் பாய்ச் சுதல் வேண்டும். இம்முறை பூங் கதிர் உருவாகும் தருணத் திலி ருந்து அறுவடை நிலை வரை 4 முதல் 5 செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிட வேண் டும்.

சதுர நடவு முறையில் நடவு செய்யப்படுவதால் கோனோ வீடர் என்ற உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி களை கட்டுப்பாடு செய்யலாம். இவ் வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே செய்யப்பட வேண் டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறைகள் உருளைக் களைக் கருவியைப் பயன்படுத்தி களைகளை வயலி லேயே மடக்கிவிடுவதால் பயிரு க்கு உரமாவதோடு மண் ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது. பயிர்களுக்கு இடையே வேரு க்கு அருகில் உள்ள களைகளைக் களை ய, கைக்களை எடுப்பது அவசியம்.

பயிரின் ஆரம்பகாலத்தில் களைகளைக் கட்டுப் படுத்த பூட்டாக்கு ளோர் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் பயன்படுத்தி களைகளைக் கட்டு ப்படுத்தலாம்.

பயிர் நன்கு வளர இயற்கை மற் றும் செயற்கை உரங்களை இட வேண்டும். கோடையில் சணப் பை, தக்கைப்பூண்டு பயிரிட்டு மடக்கி உழுதுவிடலாம். இதனுடன் எக்டருக்கு 120:38:38 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றது. தழை, சாம்பல் சத்துக்களை பிரித்து இடுவதால் பயிர் வளர்ச்சி அதிகரி க்கிறது.

எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை ஒரு கிலோ உலர்ந்த மணலுடன் கல ந்து உழுது சமன்படுத் தப்ப ட்ட வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேற் பரப்பில் தூவிவிட வேண்டும். பொது வாக மணிச்சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு உயர்விளைச்சல் பெறலாம். (தகவல்: செ.ராதாமணி, ச.ராபின், பு.முத்துகிருஷ்ணன், நெல்துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 033. 94430 07371).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply