Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?

1.முதலில் Device Manager இல் சிடி டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Device manager செல்ல டெஸ்க் டாப்பில் உள்ள My computer ஐகானை வலது கிளிக் செய்து Manage மெனுவை கிளிக் செய் யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Device Manager என் பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணிணியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் DVD / Cd Rom devices என்பது Enable ஆக உள்ளதா என சோதிக்கவும்.

2.உங்கள் கணிணியின் சிபியுவில் சிடி/டிவிடி டிரைவை இணை க்கும் IDE Cable சரியாக உள்ளதா எனவும் உடை ந்திருக்கிறதா எனவும் சரிபார்க்கவும்.

3.மேற்கண்டவை சரியாக இருந்தும் கணிணியில் சிடி டிரைவ் தெரியவில் லை என்றால் Registry இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன சிடி டிரைவை மீட்கலாம்.

Start-> Run சென்று regedit என்று தட்டச்சிட்டு எண்டர் செய்யவும். இப்போது கணிணியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள கீயை கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் சிடி/டிவிடி டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}

இந்த கீயை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டிய லில் UpperFilters, Lower Filters ஆகிய Subkey கள் இரு ந்தால் இரண்டையும் அழித்து விடவும். அழிப்பத ற்கு வலது கிளிக் செய்து Delete கொடு க்கவும். ஒரு முறை கணிணி யை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்க்கவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: