Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவாசமின்றி நம் வாசம் ஏது ?

தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சு” என்று சுவாச த்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல் நாட்கணக்கில் இருக்க லாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிட ங்களுக்கு மேல் இருக்க முடியாது. சுவாசமின்றி நம் வாசம் ஏது ?

ஒரு நிமிடத்திற்கு 16 அல்லது 18 முறைகள் நாம் சுவாசிக் கிறோம். ஒரு முறை சுவாசிப்பதற்குள் நம்முடைய இதயம் நான்குமுறை துடிக்கிறது. சுவாசிக்கும் செயல் நம்முடை ய கட்டுப்பாட்டில் இல்லை. சுவாசமும், இதயத்துடிப்பும் அனிச்சை செயல்கள் எனப்ப டும். மூச்சின் இயக்கமும், இத யத் துடிப்பும் ஒரு உயிரில் முதன்முதலாக எவ்வாறு ஆர ம்பித் தன என்பது புரியாத புதிர். சுவாசிப்பதில் உள்ள ஒழுங்கை யும், இதயத்தின் இயக்கத்தோடு அதற்குள்ள இசைவையும் ஆராயப் புகுந் தால் மனித மனம் தெளிவடையும்.

காற்றை உள்ளே இழுக்கும்போது நுரையீரல்கள் நன்றாக விரிவடைய வேண் டும். நிமிர்ந்து உட்கார் ந்து அல்லது நிமிர் ந்து நின்று சுவாசிப்பதால் உடலுக்குத் தேவை யான ஆக்சிஜன் முழு அளவில் நுரையீரலுக் குள் செல்லும். சுவாச த்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்தால் நீர் க்கோவை, காசநோய் போன்ற வியாதிகள் உடலைத் தா க்கும். நுரையீரலுக்குள் செல்லும் ஆக்சிஜன் இரத்த ஓட்ட த்தில் கலந்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரல் வழியாக வெளித்தள்ளப்படுகிற து. இந்த கார்பன் டை ஆக்சைடு வாசனை அற் றது. ஆனால் மனிதர் கள் வெளிவிடும் மூச் சுக் காற்றில் பெரும்பா லும் ஒரு கெட்ட வாசனை இருக்கும். இதற்குக்காரணம், மனித உடலில் உள்ள அசுத் தம், சிதைந்த பற்கள், நோயு ற்ற தொண்டைச் சதைகள் மற்றும் நோயுற்ற காற்றறை கள் ஆகியவை.

புகையிலைப்புகை மூச்சு உறு ப்புகளைப் பாதிக்கிறது. நுரை யீரலின் உள் உறையைக்கெடுக்கிறது. மது அருந்தியவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மூச்சுக்காற்றில் மதுவின் வாடை அடிக்கும். இரத்தத்தோடு கலந்த மது நுரையீரல்களுக்கு வந் ததும் நுரையீரல் மதுவில் இருக்கும் நஞ்சை வேகமாக அப்புறப்படுத்தும் முயற்சிதான் அந்த கெட்ட வாடை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: