Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிரு க்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெ ல்லையில் இருந்து சென்னை க்கு போன் போட்டு, `எங்கே யாவது நல்ல பொண்ணு இரு ந்தா சொல்லுங்க.. பையனு க்கு வயது ஏறிட்டே போ குது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சி யான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொ லைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல் யாண த்தில் விருப்பமில்லை. நிறுத் திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக் கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன கார ணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பால சுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமி யார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்ப த்தில் திருமணம் செய்து கொ ள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன் னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வே ண்டும்’ என்று தூரத்தில் தனிக் குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடா வடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற் றோரும் மகளின் வருமான த்தில் மகிழ்ச்சி யாக வாழ்ந்து கொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர் களால் கருத்துசொல்ல முடிய வில்லை. அதனால்தான் முதிர் கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவு க்கே நான் சமையல் செய்து போட்ட தில்லை. மாமி யாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வர னையும் சந்தேகக் கண் ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வர வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற் கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கி றார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல் யாணத்தின் மரியாதை கட் டெறும்பாக தேய்ந்து போய் க்கொ ண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒரு வன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலை பார்க் கிறான். அவனுக்கு பல இடங் களில் பெண் பார்த்தும் அமை யவில்லை. ஒருமுறை அவ னது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்க ளில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்து கொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப் ஸ்டிக்கும் வாங்கிக் கொடுத்து ஹோட்ட லுக்கு சாப்பிட அழை த்துச் செல்வதற் கே என் சம்பளம் போதா து. திருமணம் முடி ந்த பின்பும் அவர்கள் சம் பளத்தை அப்படி யே வங்கியில் சேமித்து விடு வார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறி விட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக் கிறார்கள். எப்போது திரு மணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக் கொண் டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமை க்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற் றோரைக் கவனித்துக் கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக் கூடிய பெண் தேவையா? அதிகமாக சம் பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என் னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக் கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல் லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண் டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படை யாக வைத்துதான் மாப்பிள் ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தே வை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல் லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித் துப் போவாள். அது போல் தன் ம னைவியும் செயல்பட வேண்டும் என் று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாது காக்கும் மாப்பிள்ளை வேண் டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம் மா மாதிரி பெண்ணும் கிடை க்க மாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.

பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல் லாம் பார்த்து முதலில் பெண் நிச்சய தார்த்தத்திற்கு சம்மதித்து விடுகிறா ள். பின்பு திருமணத் திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவ ளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொரு த்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ் ந்து கவனிக்கிறாள். அவைகளை திரு மணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திரு மணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக் கும் கொடுக்கும் நிலையில் இரு ப்பதால் அவளுக்கு பிடிக்கவில் லை என்றால், `உடனே நிறுத்தி விடுங்கள்’ என்று உத்தரவிடுகி றாள். பெற்றோருக்கு அதை ஏற் றுக்கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத் தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திரும ணத்தின் மூலம் மட்டுமே கிடை க்கிறது என்று சொல்வதற்கில் லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இரு க்கின்றன. கல்யாணம் செய்து கொண்டால் நிறைய பொறுப்பு களை நிறைவேற்ற வேண்டிய திருக்கும். நிறைய கடமைகள் தங்க ளுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கி றார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வர தட்சணை எதுவும் தேவை யில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண் வீட்டாரிடம் கேட்கத் தொ டங்குவார்கள். அதனால் வெறுப் படை ந்துபோய் திருமணத்தை நிறுத் திவிடும் பெண்களும் உண்டு. நிச்சய தார்த்தம் நடந்த பின்பு திருமணம் நட க்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் கா ரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத் திற்கு உட்பட்டிருந்தால்- பாலியல் ரிதியான கசப்புகளை சந்தித்திரு ந்தால்- தாம்பத்ய வாழ்க் கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திரு மணத்தினை தவிர்த்து விடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர் யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டா ரை, முகத்தை தொங்க போட் டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர் னு என் மகள் `கல்யாணத் தை எப்படியாவது நிறுத்திடுங்க ன்னு` சொன்னாள். காரணத்தை க் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திரு மண வாழ்க்கை தோல்வியில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக் கியம். எப்படியாவது கல்யாணத் தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகி றார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடி யாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக் கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மா வுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மா வும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடை க்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சி ருந்தாலும், உங் களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என் னை சமையல் வேலை பார்க்க சொல்றீங் களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெ ல்லாம் சொல் வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என் றாள். அவர்கள் இருவருக்கும் செல்போ னிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவு தான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப் பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொ ண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடு ம்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நம து திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கி விட வேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்து க்களை எல்லாம் என் பெயருக்குத் தான் வாங்கவேண்டும். சம்மத மா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தய ங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில் லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய் விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷய த்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகி றார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால ம னைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயி ருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் என க்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணு ம்‘ என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டாள். திருமணமாகாத பல இளம் பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடி க்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங் கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ர மைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல் வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கை யாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட் டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடை யாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லு ங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏக ப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப் பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வ சிகாமணி. இவர் திரு மண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச் சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப் பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகு கிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நட த்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்து விடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோ ரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக் கொள் ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள் ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண் டிவிடுவதால் ஒரு குழந்தையை கண் ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோ தனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • g.munusamy

    Hi, ungal katturai migavum arumai, idu mutrilum unmai, nan pen parkapogumbodum pala condition pottanga, ippo village & city 2lum adiga varumanam, tani veedu, adambara valkai, men vs women veetil expect pandrangal. kalyana matrimony, taragargal ematrugirargal poliana tagaval ematrividugirargal, kalyanam nadakiravarai men vs women pesinal pirachinai erpadugiradu kalyanam nadakamal pogiradu idanal 2 perukum selavu migavum adigamagiradu relationship cut agiradu. veli gowravamaga poga vara mduiya villai. mudir kannigal, mudir illinargal nattil ullanar, living to gether life today life running. migavum mosam. kadavul kappatranum tamil nattai.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: