உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை ஹாலிவுட் கவர்ச்சிக் குயின் ஏஞ்சலினா ஜோலி. இந்த ஆண்டு வெளியான சால்ட், தி டூரிஸ்ட் ஆகிய ஹாலிவுட் பட ங்களில் நடித்ததன் மூலம் நடி கை ஏஞ்சலினா ஜோலி உலகி லேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற வரிசையில் இடம் பெறுகிறார். அவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக் கிறார். இரண்டாவது இடத்தில் நடிகை சாரா ஜெசிகா பார்க்கர் இடம் பெறுகிறார். இவர் தொலைக்
காட்சி மற்றும் சினிமா நடிகை யாவார். இவரது இரண்டா வது படமான ‘செக்ஸ் அன் தி சிட்டி ‘யின் மூலம்தான் அதிக வருமா னம் பெற்றுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 140 கோடி ரூபாய் ஆகும். இந்த புள்ளி விவரங்களை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.