கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது.
பிறப்பிடம்:-
இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்று கிறது.
காவிரியின் நீளம்:-
காவிரியின் மொத்தநீளம் 800 கி.மீ. இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலு ம், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும் பாய்கிறது. இரு மாநில எல்லையிலும் 64 கி.மீ. தூரம் ஓடி இரு மாநிலத்துக்கும் பொது வான நதி காவிரி என சொன்னால் மிகையாகது.
காவிரி ஓடும் இடங்கள்:-
கர்நாடகமாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர் , மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் ஆகிய மாவ ட்டங்கள் வழியாக காவிரி ஓடுகிறது.
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப் பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென் று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரி குடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என் றும் அழைக்கப்படுகிறது.
துணை நதிகள்:-
ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் துணை நதிகள் காவிரியுடன் வந்து கலக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் சங்கமம் ஆகும் இந்த நதிகள் பெரிய காவிரியாக உருவெடுக்கிற து. இதில் சிம்ஷா, அர்க்காவதி ஆகிய ஆறு களும் சேர காவிரி மிகப் பெரிய நதியாக கம்பீரமாக தமிழக எல்லைக்குள் நுழை கிறது.
மேட்டூருக்கு கீழே தெற்கு நோ க்கி திரும்பும் காவிரியுடன் பவானி, நொய்யல், அமராவ தி ஆகிய துணை நதிகள் கலக்கிறது. இதனால் காவிரி மேலும் விரிவடை கிறது.
அணைக்கட்டுகள்:-
மேட்டூர்அணை, கிருஷ்ணராஜசாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டு ள்ள அணை களாகும். பல தடுப்பணைகளு ம் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
2 அருவிகள்:-
கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவி யும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும். ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தமிழக த்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
கொள்ளிடம், கல்லணை:-
திருச்சிமேல் அணை அமைந்துள்ள இடத்துக் குமுன்பு அது 2 கி.மீ. அளவுக்கு அகன்று அகண்ட காவிரி ஆகிறது. மேல் அணையில் இரு பிரிவு களாக பிரிந்து வடக்கு பகுதி யில் உள்ள பிரிவு கொள் ளிடம் ஆகிறது.
தென்பகுதி, காவிரியாக ஓடி கல்லணைக்கு செல்கிறது. அங்கிருந்து வெண்ணாறு பிரிகிற து. பின்னர் காவிரியின் இரு நதிகளும் பல கிளைகளாக பிரிந்து 36 கிளை நதிகளாக பாய்ந்து வளங்களை வழங்குகிறது. இறுதியில் பூம்புகார் அருகில் சிறிய ஓடை யாக மாறும் காவிரி கடலில் கல க்கிறது.
புனித நதி:-
கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடா முடியி னுள் கங்கை இருக்கிறாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என்றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறா ன். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்க ளும், மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அது தான் உண்மை.
“கங்கையிற் புனிதமாய கா விரி” என்கிறார் ஆழ்வார்.
சேர நாட்டினரான இளங்கோ வடிகள்
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!”
இதன் பொருள் என்ன தெரியுமா?
“காவிரி நடை பயின்று வருகின்ற வழி யெல்லாம் கழனிகள் எல்லாம் பச் சைப் பசுங் கம்பளங்கள் போல் திகழ் கின்றன. புனல் பெருகும் வழி யெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ் சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டினரான இளங்கோ வடிகளும், கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார்.
`காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.
காவேரிக்கும், கொள்ளிடத்திற் கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொ ண்டிருக்கிறார். “அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானது தானே?
காவேரியம்மன் கோவில்:-
அதைவிட மிக முக்கியமானதாக விளங் குவது சிறப்பு வாய்ந்தகாவே ரியம்மன் கோயில்! ஆம் காவிரித்தாய் சக்தியின் வடிவமாகி நிற்கும் திருக்கோயில் இங்கு தான் உள்ளது. நீண்ட நெடுங்காலத்திலே யே காவிரித் தாய்க்குக் கோயில் அமைத் து தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் சிலர் தேச நாதி ஸ்வரர் கோயில் என்று எழுதி வைத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது ம் மக்கள் காவேரியம்மன் கோயில் என் றே அழைக்கின்றார்கள். காவிரி அம்மை யும், காவிரியப்பனும் இணைந்து அமர்ந் துள்ள சிலையை மக்கள் போற்றி வழிபடு கின்ற னர். இப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு காவிரியப்பன், காவிரியம்மாள் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரபலமான பெயராக மாதை யனும், மாதம்மாளும் காணப்படுகிறது.
சிவாலயங்கள்:-
காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கூடுமிடம் வரை காவிரி செல்லும் வழி நெடுக சிவாலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக் கது. காவேரமுனிவன் காவிரியைக் கொண்டு வரக்காரணமானவன் என்பது புராணச் செய்தி . அந்தக் காவேரமுனிவரே அகத்திய முனிவர். காவிரிக் கரையில் அகத்திய முனிவரால் வணங்கப் பெற்ற ஐந்து புண்ணிய சிவ ஸ்தல ங்களுள் காவிரியம்மன் கோயிலும் ஒன்று. இப்பூதலிங்கங்
களை யும் காவிரி அம்மனையும் இவர் வணங்கினார் என்பது மக்களிடத்தில் வழங்கப்படும் நம்பிக் கைகளில் ஒன்று.
சக்தியின் வடிவமான காவிரி அன்னை இருக்கும் திருக்கோயிலில் சிவன் இல்லாமலா போய் விடு வார்? இங்கு அமைக்கப்பட்டுள்ள 5 சிவலிங்கம் பிரசித்தி பெற்ற லிங்கங்களின் வரிசையில் போற் றப்படுகிறது. பெரிய பெரிய அளவில் 5 லிங்கங்க ள் ஆலயத்திற்குள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு ள்ளது. இந்த லிங்கங்களை ஐந்து பூத லிங்கங்கள் என்று சிவனடியார்கள் போற்றி வணங்குகின்றன ர். இங்கு நிறுவப்பட்டுள்ள நந்திச்சிலை சிறந்த கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள சிறந்த நந்தி களில் இதுவும் ஒன்று.
திருச்சி காவேரியில் ஆடிப்பெருக்கு விழா:-
திருச்சி மாவட்டத்தின் பல்வே று இடங்களில் இருந்தும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவ துண்டு.அதுமட்டுமல்ல பக்கத்து மாவ ட்டமான புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பொ துமக்கள் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு வருவார்கள்.
ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி அம்மா மண்டபம், காவிரி ஆற்றின் ஓடத்துறை படித்துறை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 3 மணி முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
இதுதவிர திருச்சி, திருவரங்கம் தீயணைப்பு படையினரு ம் தயார் நிலையில் இருந்தனர். அதிகளவு தண்ணீர் வரு வதால் நீச்சல் தெரியாதவர்களை தண்ணீர் அடித்து சென்றுவிடாமல் அவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்களு ம் தயார் நிலையில் வைக்கப்படுவர்.
புதுமண தம்பதிகள் மற்றும் தம்பதிகள் எப்படி காவிரி ஆற்றுக்கு வந்து தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று காவிரி தாயை வண ங்கி பூஜை செய்து வருகிறார்களோ அதே போல திருவரங்கம் ரெங்க நாச்சியார் தாயாரும் காவிரிக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மாலை மாற்றி கொள்கிறார்.
ஆடிப்பெருக்கையொட்டி திருவரங் கம் நம் பெருமாள் நேற்று அதிகாலை பூஜைமுடிந்து பல்லக்கில் திருவரங்கம் அம்மா மண்டபத் துக்கு வருவார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். திருவரங்கம் அம்மா மண்டபத்தி ல் காவிரி தாயை வணங்கிய பக்தர்கள் மற்று ம் புதுமண தம்பதிகள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்து செல்வர். ஆடிப்பெருக்கை கொண்டாடும் பக்தர்களுக்கு ஒரு நா ள் முழுவதும் பெருமாள் அம்மா மண்டபத்தில் தங்கி இருநது காட்சி தரு வார். திருவரங்கம் கோயில் சார்பில் காவிரி தாய்க்கு பூஜை செய்யப்பட் டு, அதன் பிறகு காவிரி தாய்க்கு படையல் செய்து பட்டுசேலையும் வழங்கப்படும்.
பின்னர் திருவரங்கம் நம்பெரு மாள் அம்மா மண்டபத்தில் இரு ந்து புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்து நம்பெருமாள் காட்சி அளி ப்பதால் புதுமணத் தம்பதிகள் பெரும்பாலோர் அம்மா மண்ட பத்துக்கு வந்திருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதை காண முடி யும்.
அம்மா மண்டபத்துக்குநேற்று பொதுமக்கள் வருகையை யொட்டி அம்மா மண்டபம் சாலை முழுவதும் தரைக் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருக்கும். அந்த கடையில் காவிரி தாய்க்கு ஏற்ற பழ மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு வியாபாரம் நடக்கும். இதேபோல காவிரி ஓட த்துறை படித்துறை செல்லும் இடங்களிலும் வியாபாரம் மும்முரமாக நடக்கும். இதுபோல தஞ்சை. திருவையாறு, பூம்புகார், நீடாமங்கலம், பாபநாசம், முசிறி, குளித்தலை, கரூர் ஆகிய இடங்களிலும் ஆடிப்பெ ருக்கு விழா சிறப்பாக நடக்கும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட் டம்:-
ஒகேனக்கல் பகுதி தமிழகத்துக் குதான் சொந்தமானது. இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தம் என்று அம்மாநில அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. ஒகேன க்கல் பகுதி யானது தமிழகத்துக்கே சொந்தம் என்பதை நிரூபிக்க எங்களிடம் தகுதியான ஆவணங்கள் உள் ளன.
இக்கூட்டுக்குடிநீர் திட்டம் என்பது இப்போது முடிவெடுத் து இப்போதே செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை. காவிரி யில் இருந்து தமிழக த்துக்குச் சொந்தமான 1.4 டி.எம்.சி. தண்ணீர் பெறுவ தற்காக 2மாவட்டங்களில் வாழும் 30லட்சம் மக்களின்தாகத் தை தீர்க்கவே கொண்டு வரப்பட்டது.
மேட்டூர் அணை:-
மேட்டூர் அணை காவிரி ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரில் அமைந்துள் ளதால்அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையை க் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான் ஆசி யாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியது மான ஏரியாக விளங்கியது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
கல்லணை:
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது திருச்சி க்கு அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட ப்பட்டுள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப் புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணு ம் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டு களுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத் து நிறுத்தி வருவது பெரிய அதிசயம் ஆகும்.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது. தற்போது புழக்கத் தில் இருக்கும் அணைகளில் இது வே மிகவும் பழமையானது என்று கருதப் படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப் படுகிறது.
விவசாயம்:-
காவிரி டெல்டா மாவட்டங்களா ன தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ங்களில் முக்கிய தொ ழிலாக விவசாயம் உள்ளது. அதில் நெல் சாகுபடி யே முக்கிய தொழிலாகும். நெல் சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதி வரை சென்றால்தான் அதில் சாகுபடியை முழுமை யாக செய்ய இயலும்.
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் என சில பகுதிகளை இணைத்துக் காவிரி நீர்ப் பாசன மண்டல மாகப் பிரித் திருக்கிறார்கள். இந்தக் காவிரி நீர்ப்பாசன மண்டலத்தில் குருவை, சம்பா, தாலடி என்னும் 3 பருவமும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற நெல் ரகங்கள் உரப்பரி ந்துரை, பயிர்ப் பாதுகாப்பு முறை ஆகியவற் றைப் பற்றிக் கையேடு தயார் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் அந்தப்பரிந்துரைக ளைப் பின்பற்றி அவற்றில் குறிப்பிட்டுள்ள 90% மகசூலைப் பெறுகிறார் கள்.
காவிரியைச் சுற்றி பார்க்க ரெடியா………….