ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்தி
“நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் “டிவி’ நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீஸ் கமிஷ னரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ் நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, “மார்பிங்’ செய்யப் பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்”டிவி’ ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது.
சிந்திக்கவும்: அசிங்கம் பிடித்த நித்தியானந்தா சன் டிவி இயக்குனர் கைது செய்யப்பட்டதை பயன்படுத்தி தானும் ஒரு புகாரை கொடுத்து தன்னுடைய குற்றத்தை மறைக்கப்பார்கிறார். நித்யானந்தா நடிகையோ டு இருந்த சல்லாப விடியோ காட்சிகள் உண்மை என்று பெங்களூர் தடவியல் துறை நிருபித்திருந்தும், ஹிந்து மதத்தை கேவலப்படுத்த சன் டிவி முயற்சித்ததாக ஒரு பொய் புகாரை கொடுத்து தன்மீது உள்ள வழக்கை திசைதிருப்ப பார்கிறார். இவரது ஆசிரமங்களை மனம் திருந்திய பக்தர்கள் அடித்து நொறுக் கியதை சன் டிவி குண்டர்கள் செய்தார்கள் என்று திசை திருப்ப பார்கி றார்கள். நித்யானந்தா என்ற ஆன்மீக வியாபாரிக்கு, பெண் பித்த ருக்கு, மக்கள் கொடுத்த செருப்படியை சட்டம் கொடுக்குமா? பொ றுத்திருந்து பார்ப்போம்.