Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான்!

திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு. சிறந்த இல்லத்தரசியாகவும், கணவருக்கு சிறந்த மனைவியாகவும், குழந் தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற வேண்டும். இதில் சிக்கலான விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற பெய ரெடுப் பதுதான். மனைவி என்ப தை அதிகாரம் செய்யும் பதவி யாக எடுத்துக் கொண்டு கணவ ரை அடிமையாக நடத்துவபவர் களும் இருக்கத்தான் செய்கின் றனர். மனைவியாக இருப்பதை விட கணவருக்கு நண்பியாக இருப் பதுதான் சிறந்தது என்று உளவியலா ளர்கள் தெரிவித் துள்ளனர். சிறந்த மனைவியாகயும், ஆலோசகராகவும் திகழ நினைப்பவர் களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில யோசனைகள்

மனைவி ஒரு மந்திரி

கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச் சகரும் மனைவிதான் என் பதை ஒவ்வொ ருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். மனை வி ஒரு மந்திரி என்பதை அனைத்து சந்தர் ப்பத்திலும் கணவருக்கு உணர்த்த வேண் டும். கணவரின் அனைத்து தேவைகளை யும் நிறைவேற்று வதோடு மட்டும் மனைவியின் கடமை முடிந்து விடுவதி ல்லை. தவறுகளை எடுத்துக்கூறி திருத்து வதற்கும் உரிமை உண்டு.

புரிதல்தான் வாழ்க்கை

கணவன் மனைவிக்கிடையே ஒரு சில நேரங்களில் கருத்து மோத ல்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவற்றை சாதார ணமாக எடுத் துக் கொண்டு உடனடியாக தீர்ப்பதில் அக் கறை எடுத்துக்கொள்ள வேண் டும். தேவையற்ற விவாதங் களை தவிர்த்தாலே குடும்பத் தில் சிக்கல்கள் ஏற்படாது.

ஈகோவை துரத்துங்கள்

கணவரிடம் பேசும்போது, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அன்பும் கனிவும் மட்டுமே இருக்கவேண்டும். அதிகாரமோ, ஆணவமோ தேவையில்லை. சிறு வார்த்தைக் கூட மனதளவில் காயத்தை ஏற் படுத்தி விடும். நீங்கள் பேசும் வார் த்தைகள் எளிதாக உங்கள் கண வரை சென்றடைந்து அதை செயல் படுத்தும் விதமாக அமைய வேண் டும். எந்த சந்தர்ப்பத்திலும் ஈகோ வை எட்டிப்பார்க்க விடா தீர்கள்.

கணவருக்கு மதிப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் பிறரின் முன் கனவரை விமர்ச்சிக்க வேண் டாம். குழந்தைகளின் முன் கூட கணவரை விமர்ச்சிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும். கணவர் செய்வது தவறாகவே தெரிந் தாலும், தனியாக இருக்கும் சந்தர்  ப்பங்களில் பேசி அவரது தவறை புரிய வைக்க வேண்டும்.

மன உளைச்சலை தீர்க்கலாம்

எல்லா நாட்களிலும் படுக்கையறை யில் ஒரே மாதிரியாக இருக்க வே ண்டும் என்ற அவசியம் இல்லை. வே ளைப்பளு, மன உளைச்சல் உள்ளி ட்ட காரணங்களில் சில நாட்களில் செயல்பட முடியாத நிலை ஏற்படாலாம். அன்றைய தினத்தில் கண வரை தொந்தரவு செய்வதை விடுத்து அவரை உற்சாகமூட்டும் விளையாட்டுக்களின் ஈடுபட லாம். அது கணவரின் மன உளைச் சலை போக்கி விடும்.

கணவர் என்பவர் காலம் முழு வதும் நம்முடன் வரப் போகி றவர் என்ற எண்ணம் மனை விக்கு இருக்க வேண்டும். வாழ்வின் சரிபாதி. கண வரின் மதிப்பை உயர்த்துவது மனை வியின் கடமை. அசாதா ரண சந்தர்ப்பங்களில் கணவரின் நண்பர் கள் உங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்களிடம் மதிப்பை உயர்த்தும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply