Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா

நடிகை ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடவிருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ளன. தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத் தில் நடித்து வரும் ஜெனிலியா விடம் கால்ஷீட் கேட்டு சில தயாரி ப்பாளர்கள் சென்றுள்ளனர். ஆ னால் அம்மணியோ… வேலா யுதம் முடியட்டும்; பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். அதேபோல பாலி வுட்டில் தற்போது ஜான் ஆபிரகா முடன் நடித்து வரும் போர்ப்ஸ், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும் போல் பச்சன் ஆகிய படங்களைத் தவிர புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தாலும், புதிய படங்கள் எதுவும்ஒத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில்தான் ஜெனிலியா சினி மாவுக்கு முழுக்கு போடப்போ வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிலியாவும், ரிதேஷ் தேஷ்மு க்கும் காதலித்து வரும் சங்கதி சமீப காலமாக ஊரறிந்த சங்கதியாகவே ஆகி விட்டது. அதுவும் இந்த காதலு க்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஜெனியின் பெற்றோர் இப்போது பச் சைக் கொடி காட்டி விட்டதாலோ என் னவோ… ஜோடியாக ஊர் சுற்றத் தொடங்கி யிருக்கிறது இந்த ஜோடி. எத்தனை நாளைக்குத்தான் காதல் ஜோடி களாக திரிவது என நினை த்த இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கி றார்களாம். திருமணத்துக்குப் பிறகு அம்மணி சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதால்தான் இப்போதே புதிய படங்களில் கமிட் ஆகா மல் தவிர்த்து வருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

NEWS IN DINAMALAR

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply