Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்ன ஆட்சி சார் இது…

ஜூலை 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

க‌டந்த சில மாதங்களாக நம் நாட்டில் நடக்கிற நிகழ்வுகளைப் பார்க் கும் போது, நம் தேசத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? என்ற சந்தேகம் மேலோங்குகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டமா? தடியடிக்கொண்டு அடக்கு! ஊழலை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் கொண்டு வர யாராவது முயற்சிக்கிறார்களா? உடனே அவர்கள்மீது அவதூறு கூறி அவர் களது செயல்களை முடக்கு? ஊழ லில் சிக்கியவர் கூட்டணி கட்டி மந்திரியா? முடிந்த வரை அவ ரைக் காப்பாற்று! இவைதான் இன் றைய ஆட்சியின் கொள்கைகளாக இருக்கின்றன•

விலைவாசி உயர்வைப் பற்றி கேட்டால், மக்கள் அதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். என்கி றார் நிதியமைச்சர். பெட்ரோல், டீசல் விலையைவிட அதற்கு அரசாங்கம் விதிக்கிற வரிகள் பல மடங்காக இருக்கிற கொடுமை இந்த தேசத்தில் மட்டும்தான்.

ருக்கு ஒரு வாகனம் என்கிற நிலை மாறி ஆளுக்கு ஒரு வாகனம் என்ற நிலையால் தான் இந்த உயர்வு தவிர்க்க முடியாததது என்கி றது அரசு. பெட்ரோலுக்கு மாற்றாக மாற்று எரி சக்தியை கொண்டு வர இந்த அரசு என்ன செய்திருக்கிறது?

இதுபோகட்டும்… பற்றி எரிகிறது தெலுங்கானா. இது எதிர் பார்த் ததுதான் என்று போராட்டக்காரர் களை வெறுப்பேற்றுகிறார் உள் துறை அமைச்சர். கடந்த வாஜ் பாய் அரசில் உத்ராஞ்சல், சட்டீ ஸ்கர், ஜார்கண்ட் என்று எளிதா னக மாநிலப் பிரிவினை நடை பெற் றதே, இப்போது என்ன சிக்கல்? இந்தப் பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்கு பயன் படுத்திக் கொள்ளவோ கட்சிகள் முனைகின்றன• பொது மக்க ளின் எதிர்பார்ப்புகளுக்கு அவசரத் தீர்வு காணா மல் அமைதி காத்து ஆரப்போடுகிற மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை என் கிறார்கள் ஆந்திர மக்கள்.

ஆண்டை நாட்டுக்காரர்களுடன் உறவு எப்படி என்கிறீர்களா? இலங்கையைத் தட்டிக் கேட்க பயம். சீனா சீண்டி நம்மை பிராண்டி னாலும், ஹி… ஹி…. இதெல்லாம் சும்மா தமாஷ் என்று சமாளிக்கிற கோழைத்தனம். பயங்கர வாத நாடு என்று எல்லோரும் தள்ளி வைத்தாலும் கூட வாங்க பேசலாம் என்று பாகிஸ்தானுக்கு பாய் விரிக்கிற மனோபாவம்.

இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால், என்ன கொடுமை சார் இது என்கின்ற பாணியில் என்ன ஆட்சி சார் இது என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply