Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய டாடா இண்டிகாம் மொபைல்

சி.டி.எம்.ஏ. மொபைல் சேவை வழங்கும் பிரிவில் இயங்கும் டாட்டா இண்டிகாம், பட்ஜெட் விலையில் ரூ.1,149க்கு மொபைல் ஒன்றை, விற்பனைக்கு வழங்கியுள்ளது. அறி முகச் சலுகையாக, எஸ்.எம்.எஸ். களை இலவசமாக்கி யுள்ளது. அல்காடெல் எஸ்.எம். எஸ். எக்ஸ்பிரஸ் என இந்த மொபைல் போ னை அழைக்கிறது. இதன்படி, இந்த போ னை வாங்கி ரூ.55க்கு முதல் முதலாக ரீ சார்ஜ் செய்கையில், ஒவ்வொரு நாளும் இந் திய அளவில் 100 எஸ். எம். எஸ். களை இலவசமாக அனுப்ப அனுமதிக்கிறது. இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இத்துடன் ரூ.29க்கு டாக் டைம் வழங்கப்படுகிறது.இந்த சலுகை காலாவதியானவுடன், எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த மொபைல் போனில், குரூப் எஸ்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ். அனுப்ப தனி கீ, குவெர்ட்டி கீ போர்டு, எப்.எம். ரேடியோ, 500 எஸ். எம்.எஸ். மற்றும் 500 போன் முகவரிகள் தேக்கி வைக்கும் வசதி, 1024 கேரக்டர்கள் வரை கொண்ட பெரிய எஸ்.எம்.எஸ். செய்தி களை அமைக்கும் வசதி ஆகியவை வழக்கமான வசதி களுடன் தரப்பட்டுள்ளன. டைட்டானியம் கிரே மற்றும் செரி சிகப்பு வண்ண ங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply