Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தமிட்டுக் கொண்டால் கர்ப்பம் – சுவாரஸ்ய தம்பதி

உலகெங்கும் சில விடயங்களைப் பற்றி ஒன்றுமே அறியாத ஞான சூனியங்கள் இருக்கிறார்கள்.. இங்கே பாருங்கள் நடந்த ஊரு புதுமையான சம்பவத்தை..

சீனாவை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ஒரு தம்பதி சமீபத்தில் வந்தனர். தங்க ளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறிய அவர்கள் அதற்கு என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட் டுள்ளனர்.

அவர்களிடம் பேச்சு கொடுத்த டாக்டர், மண வாழ்க்கை பற்றி விசாரித்தார். அவர்கள் சொன்னதில் டாக்டருக்கு மயக்கமே வந்து விட்டது. அவர்கள் கூறியது இதுதான்.. ‘‘ஒரே படுக்கையில் படுத் தால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

திருமணம் ஆகி பல நாட்கள் ஆகிறது. அப் போதிருந்தே இருவரும் ஒரே படுக்கையில் தான் படுத்து தூங்குகிறோம். ஆனாலும் குழந் தை பிறக்கவில்லை’’ என்றார்கள்.

அவர்கள் 30 வயதுகளில் இருந்த தம்பதியர். கணவன் பி.எச்டி. முடித்தவர். மனைவி முது நிலை பட்டதாரி. சிறு வயதில் இருந்து படிப்பி லேயே கவனம் செலுத்தியதால் செக்ஸ் தொடர்பாக தெரி ந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் கூறினர். ‘‘கல்யாணத்துக்கு முன்பு சிறிது காலம் காதலித்து வந்தோம்.

கையை பிடித்தால், முத்தமிட்டுக் கொண்டால் கர்ப்பமாகி விடு வாள் என்று பயந்தோம். அதனால், கையைக்கூட தொடாமல் காதலித்தோம்’’ என்றனர் அந்த சுவாரஸ்ய தம்பதிகள்.

செக்ஸ் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை புரிந்துகொண்டார் டாக்டர்.

அரிவரியில் இருந்து செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும் கவுன்சலிங் வகுப்புக்கு அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் டாக்டர். இத்தகவலை சீனாவை சேர்ந்த சின்சியூ நாளிதழ் வெளியிட்டுள் ளது.  அப்ப பாருங்கோவேன் இந்த படித்த முட்டாள்களின் செயற் பாடுகளை?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply