கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பால பணிகளுக்காக விஜய காந்தின் ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது போல, இப் போது போரூர் மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்டபத்தையும் இடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சென் னை, போரூர் சிக்னல் அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு அப்பகு தியில் ரூ.34கோடி செலவில் மேம் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப் பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிக மான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப் படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் இப்பகுதியில் உள்ளது. மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்படத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்துள் ளனர். இதற் கிடையில், கடைகள் இடிக் கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீ சார் குவிக்கப்பட்டு இருந் தனர்.
ஆண்டாள் அழகர் திருமண மண் டபம் இடிக்கப்பட்டதால் அப்போ தைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வுடன் நேரடியாக மோதத் தொடங் கினார் விஜயகாந்த். அதுபோல் இப்போது விஜய்யின் திருமண மண்டபமும் இடிக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.
NEWS IN DINAMALAR