Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென் டர் அமைந்துள்ளது. சென் னையிலிருந்து 80 கி.மீ., தூரத் தில் அமைந்துள்ள இந்த விண்வெளி ஆய்வு மையம் கிழக்கு ஆந்திர கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ளது. ஐ.எஸ்.ஆர். ஓ.,வின் முன்னாள் தலைவர் சதீஷ் தவானை கவுரவிக்கும் விதமாக 2002ல் இந்தப் பெயரைப் பெற்றது என்ற போதும் 1969லேயே இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அடித்தளமி டப்பட்டு விட்டது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் 32 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன பிரிவுகள்: சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் டெக்னி கல் அசிஸ்டெண்ட் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம் யூனிகேஷன், மெக்கா னிகல், ஆட்டோமொபைல், இன்டஸ் ட்ரியல் சேப்டி, கெமிக்கல், போட்டோகிராபி ஆகிய இட ங்களும், சயின் டிபிக் அசிஸ் டெண்ட் பிரிவில் மூன்று பிரிவுகளிலும், ஜூனியர் இந்தி டிரான்ஸ் லேட்டர் பிரி விலும் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. முழுமையான விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார் க்கவும்.

தேவை என்ன: டெக்னிகல் அசிஸ்டண்ட் பதவிகளுக்கு தொடர்பு டைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூல மாக முதல் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய டிப்ளமோ படிப்பு தேவை. சயின்டிபிக் அசிஸ்டன்ட் பதவிக்கு பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரிவு வாரியாக கல்வித் தகுதி தேவை என்பதால் கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப் பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இதர தகவல்கள்: இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரி கிறது. சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் பணி இடங்களுக்கு ஆன் -லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன் -லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் விண்ணப்பத்தை போதுமான காப்பிகள் எடுத்துக் கொள்ளவும். ஒரு காப்பியுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ் நகல்களின் அட்டெ ஸ்ட் செய்யப்பட்ட பிரதிகள் போன்றவற்றை இணைத்து பின் வரும் முகவரிக்கு 25.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.07.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 25.07.2011
இணையதள முகவரி : http://www.shar.gov.in/Tech/advt.pdf

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply