Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் ! ! !

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கி றோம்.

கை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை… அதில் மருத்துவ ரீதியான பலன் களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத் துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ் வொரு உறுப்பின் நல னையும் பராமரிக்க உதவு கிறது…!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்…

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதை களும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல் வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங் களில் ஒன்று சேர் வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறி ப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளி களில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மரு த்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடை பெறும். இதுதான் அக்கு பஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத் துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தி யாவில்தான். இராமதேவர் என்ற சித்தர் தான் இதை சீனா வரை கொண்டு சேர்த் தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கு இதை பரவச் செய்து வருகி றார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங் காலில் தான் அதிகப் படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயி லுக்கு செல்வது, கல்லும் முள் ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக் தியுடன் ஏற்றுக் கொள் வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண் டாடி மகி ழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமை யான அக்குபஞ்சர் வைத்திய த்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட் டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனா கவும் மார்க்கெட்டுக்கு நிறை ய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபே ஷன்… தங்கம் விற்கும் யானை விலை, குதிரை வி லையில், இவை நம் தேவை களையும் நிறைவு செய்யும்…

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமை யும்!…

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வை த்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகு ந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறை யானது!…

சரி…. நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: