Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Youtube-ன் புதிய அழகான தோற்றம் மற்றும் புதிய வசதிகளை பெற

கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வரு கின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெ யிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக் கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங் களை கூகுள் தற்பொழுது செய் துள்ளது. அடுத்து கூகுளின் வீடியோ தள மான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உரு வாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்து க்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறயில் தான் இப் பொழுது விட்டுள்ளது. வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுத ல்கள் தேவை பட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும்.

  • யூடியுபின் இந்த புதிய தோற்றத்தின் திட்டத்திற்கு Cosmic Panda என பெயரிட்டுள்ளது. 
  • இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கில் Youtube New Look கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள்.
  • அந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே உள்ள Try it Out என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் யூடியுப் தளம் புதிய தோற்றத்துடன் மாறிவிடும்.

  • இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகளும் கூகுள் புகுத்தி யுள்ளது. 
  • புதிய வகை கருப்பு நிறத்தினால் ஆனா நீளமான வீடியோ பிளேயரை இதில் அறிமுகபடுத்தி உள்ளனர்.

  • உங்களின் Playlist கண்டறிய மிக சுலபமாக வடிவமைத் துள்ளது.
  • நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை நிறுத்தாமல் எந்த அளவிலும் (Video Size) மாற்றி பார்த்து கொள்ளலாம்.
  • வீடியோக்களுக்கு கருத்துரைகள் கொடுத்தால் அவர்களின் ப்ரோபைல் படங்கள் தெரிகிறது. 
  • Related Videos பெரிய அளவில் காட்டுகிறது.

மேலும் பல உபயோகமுள்ள வசதிகளை யூடியுப் புகுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றம் தேவையில்லை என நினைத்தால் Cosmic Panda இந்த தளத்திற்கு மறுபடியும் சென்று அங்கு உள்ள Older Version என்பதில் கிளிக் செய்தால் மறுபடியும் பழைய தோற் றத்தை பெறலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply