Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறியாப் பருவக் காதல் ( Infactucation Love )

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந் த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார் கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என் று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என் பதை உயிரினும் மேலாக நினைப் பார்கள். ஆனால் இந்தக் காலக்கட் டத்தில் காதலில் ஒரு மிகப் பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காத லில் இறங்கி விடுவார் கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடு க்க நினைப்பார்கள். தன்னிடம் என்னெ ன்ன தகுதிகள் இருக்கின்றன என் பதை கணக்கில் எடுத்துக்கொள்ளா மல், எதிரே இருப்பவரின் தகுதியி னை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திர ங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல் லாதவர்க ளாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர் களை மற்ற பிரிவி ல் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வி னை சமாளிக்க முடி யாதவர்கள் என்ற பிரிவில் அறிவிய லாளர்கள் சேர்த்து விடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழ வைப்பதற்கு அடிப்படைத் தே வையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல் லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்க லாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற் குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப் பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொட முடியாது என்பது தான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமணம் என்பது ஏற்றுக்கொள்ளப் படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதா ரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந் தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழு த்தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொ ழுது காதலிக்கப்படவும் இவர்களுக் கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொ ள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லா தபட்சத்தில் காதலின் அடுத்தக் கட்டத்தை தொட சம்பந்தப்பட்ட க் காதலர்களே விரும்பமாட் டார்கள். அதனால் டீன் ஏஜ் காதல ர்கள் எல்லாம் இந்த அத்தியாயத் தோடு ஜோராக கைதட்டி விடை பெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: