மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில் வெடி குண்டு வெடித்தது. இதே போல், ஜாவே ரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றா வது குண்டு வெடிப்பு தெற்கு மும் பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டு வெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங் களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிக மானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவ மனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட் டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர் குண்டு வெடிப் புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.
ஜாவேரி பஜார் பகுதியில் இரு ந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித் துள்ளது. இதே போல், தாதர் பகு தியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு சம்பவ த்தையடுத்து, நாடு முழு வதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்து ள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத் தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரி வித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
NEWS IN DINAMALAR