Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறைவனை வணங்க சிறந்த பூ எது ?

குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன் னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவத ற்காகக் கபிலர் இப்பாட லைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண் டு. குறிஞ்சிப் பாட்டின் தலை வி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறி த்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் 99 மலர்கள் இடம்பெறு கின்றன. இம்மலர்கள் 34 அடிகளில் தொடர்ச்சியாக வர்ணிக்கப் படுகின் றன. அப்பூக்களின் பெயர்கள் இதோ! காந்தள், ஆம்பல், அனிச்சம், குவ ளை (செங்கழுநீர்ப்பூ), குறிஞ்சி, வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை (செம் மணிப்பூ), உந்தூழ் (பெரு மூங்கில்), கூவிளம் (வில் வம்), எறுழம், கள்ளி (மராமரப்பூ), கூவிரம், வடவனம், வாகை, குடசம் (வெட் பாலைப்பூ), எருவை (பஞ்சாய்க் கோரை), செருவிளை (வெண் காக்கனம்), கருவிளை (கருவி ளம்பூ), பயினி, வானி, குரவம், பசும்பிடி (பச்சிலைப்பூ), வகுளம்(மகிழம்பூ), காயா (காயாம்பூ), ஆவிரை, வேரல் (சிறு முங் கில் பூ), சூரல்(சூரைப்பூ), குரீ இப் பூளை (சிறுபூளை, கண்ணுப் பிள்ளை என் னும் கூரைப்பூ), குறு நறுங் கண்ணி (குன்றிப்பூ), குரு கிலை (முருக் கிலை), மருதம், கோங்கம், போங்கம் (மஞ்சாடிப்பூ), திலகம், பாதிரி, செருந்தி, அதிரல் (புனலிப்பூ), சண்பகம், கரந்தை (நாறுகரந்தை), குளவி (காட்டு மல்லி), மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை (கஞ்சங் கொல்லை) , பிடவம், சிறு மாரோடம்(செங்கருங்காலிப்பூ), வாழை, வள்ளி, நெய்தல், தாழை (தெங்கிற்பாளை), தளவம் (செம் முல்லைப்பூ), தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல் (பவளக்கான் மல்லி), செம்மல் (சாதிப்பூ), சிறுசெங்குரலி (கரு ந்தா மக்கொடிப்பூ), கோடல் (வெண் கோடற்பூ), கைதை (தாழ ம்பூ), வழை (சுரபுன்னை), காஞ்சி, நெய்தல் (கருங்கு வ ளை), பாங்கர் (ஓமை), மராஅம் (மரவம்பூ, வெண்கடம்பு), தண க்கம், ஈங்கை (இண்டம்பூ), இல வம், கொன்றை, அடும்பு (அடு ம்பம்பூ), ஆத்தி, அவரை, பகன் றை, பலாசம், பிண்டி (அசோகம்பூ), வஞ்சி, பித்திகம் (பிச்சிப்பூ), சிந்துவாரம் (கரு நொச்சிப் பூ), தும்பை, துழாஅய் (துளசி), தோன்றி, நந்தி (ந்நதியா வட்டைப்பூ), நறவம் (நறைக் கொடி), புன் னாகம், பாரம் (பருத்திப்பூ), பீரம் (பீர்க்கம்பூ), பைங்குருக் கத்தி (பசிய குருக் கத்திப்பூ), ஆரம் (சந்தனம்), காழ்வை (அகில்), புன்னை, நரந்தம் (நார த்தம்பூ), நாகம், நள்ளிருள் நாறி (இரு வாட்சிப்பூ), குருந்தம், வேங்கை, புழுகு(செம்பூ) என் பவை.

இத்தனை பூக்கள் இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்திருக் கின்றன. இப்போது ஒரு சிலவே உள்ளன. இவற்றின் பெயர்க ளைத் தொகுத்துத் தந்த கபி லரை இயற்கையை வர்ணிப் பதில் கபிலரே சிறந்தவர் என்று தமிழறிஞர் தனிநாயக அடிக ளார் போற்றுகிறார். இவற்றிற் கெல்லாம் மேலாக சிறந்த பூ அன்பு என்கிறார் விவேகானந் தர். இந்த அன்பினால்,  அள்ளிக் கொடுக்கும் வள்ளலான இறை வனை பூஜித்தால் நமக்கு வேண்டியதைப் பெறலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: