விலங்கினங்கள் தமது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பிழைத்து வாழ தோற்றத்தில் இயற்கை யாகவே பல வினோத உடலமைப்பை கொண் டுள்ளன.
இன்னும் சில விலங்குகள் தமக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் தமது வழ மையான தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் படைத் தவையாக காணப் படுகிறது.
உதாரணமாக பச்சோந்தி தாம் இருக்கும் இடங்களுக்கு ஏற்றாற் போல தமது நிறத்தை மாற்றும் திறன் கொண்டது. இவ்வாறான விலங்குகளின் செயற்பாடுகள் விஞ்ஞானத்தில் தக்கன பிழைத்தல் என கூறப்படுகிறது. இது மாத்திரமின்றி சில விலங்குகள் எதிரிகளை அல்லது தமக்கு தேவையாக இரையை பிடிப்பதற்காக இருக்கும் இடம் தெரியாமல் வேறு ஒரு சடப்பொருளை போன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இங்கே வீடியோவில் நாம் காட்டும் விலங்கும் அப்படித்தான். இது கடல்வாழ் உயிரினமான octopus ஆகும். ஏனயை ஒக்டோபஸ்சில் இருந்து இது சற்று வேறுபட்டு காணப்படுகிறது. அது ஆங்கிலத்தில் mind blowing mimic octopus என அழைக்கப் படுகிறது. இது பல வடிவங்களில் மாற்றமடைவதை நீங்கள் அவதா னிக்கலாம். இதன் விந்தையான தோற்றத்தை நீங்களும் காணு ங்கள்…