எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர் பார்த்திராத புதிய மாற்றங் களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவி த்துள்ளது.
மார்ச் 20, 2010-இல் ஐஸ்லா ந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறி த்து இவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அந்த எரிமலை வெடித்து வானில் மிகப்பெரிய் அளவில் சாம்பல் புகையை கக்கி ஐரோப்பா முழு தும் அது பரவிய விதத்தை பிரான் ஸில் உள்ள ஆய்வு நிலையத்திலி ருந்து இந்த ஆய்வாளர்கள் கண்டு ள்ளனர்.
இந்த சாம்பல் மூலக்கூறுகள் விண்வெளியில் உள்ள மற்ற ரசாய னக் கூறுகளுடன் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதையும் இவர்கள் ஆய்வு செய்துள்ள னர்.
வெடிப்பிலிருந்து கிளம்பிய ரசாயனக்கூறுகளில் பெரும் பாலும் கந்தக அமிலக் கூறுகள் இருந்துள்ளது. கந்தக அமில க்கூறுகள் மிகப் பெரிய அள வில் விண்வெளியைச் சூழ்ந் தால் அது மேகக்கூட்டத் தை உருவாக்கும் இந்த மேகக் கூட் டம் வானிலையில் தாக்கம் செலுத்தும் என்று இவர்கள் கூறுகி ன்றனர்.
நாம் நினைப்பதைவிட 100 மில்லியன் மடங்கு அதிக மாக சாம்பல் புகையை இந்த எரிமலைகள் தோற்று விக்கின்றன. இந்த சாம்பல் புகை மண்டலம் விண் வெளியில் குறைந்த உயர த்தில் மேகக் கூட்டங்களை உருவாக்கும் என்று தெரிகி றது.
ஆனால் இதனால் என்னவிதமான வானிலை மாற்றங்கள் விளை யும் என்பதை மேலும் ஆய்வுக்குட்படுத்தும்போதுதான் நாம் கண்ட றிய இயலும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.